ரஜினிக்கு இளையராஜா கொடுத்த அட்வைஸ்- கவிதைக்கு பொய் அழகு, கவிஞருக்கு?

எழுத்துகளில் இரு வகை உண்டு.. எழுத்து பாணிக்காகவும், நடைக்காகவும் மட்டுமே சிலவற்றை ரசிக்கலாம். சில எழுதுகளை நடை பற்றி கவலைப்படாமல் , கண்டெண்ட்டுக்காக ரசிக்கலாம் ( சில எழுத்துகளில் இரண்டு அம்சமே நன்றாக இருக்கும் )

இசைஞானி இளையராஜாவின் கட்டுரைகளை அதில் இருக்கும் கண்டெண்ட்டுக்காகவே விரும்பி படிப்பது என் வழக்கம்.. அவர் எழுத்து எதிர்பாராத பத்திரிக்கைகளில் எல்லாம் வெளிவரும். எனவே பல கட்டுரைகளை தவற விட்டு வருந்தி இருக்கிறேன்,

இந்த நிலையில், அவர் கட்டுரை தொகுப்புகள் புத்தகமாக வரும்போது அதை கச்சிதமாக கவ்வி கொள்ள நான் தவறுவதில்லை.. எப்போதோ படித்த புத்தகம் என்றாலும் இன்னும் என் நினைவில் நிற்கும் ஒரு புத்தகம்தான் , பால் நிலாப் பாதை

அவர் வாழ்வில் நடந்த சில முக்கிய்மான நிகழ்ச்சிகளை நம்முடன் இதில் பகிர்ந்து இருக்கிறார். சிலவற்றை அப்படியே சொல்லி இருக்கிறார், சிலவற்றில் கிடைக்கும் பாடங்களையும் சுட்டி காட்டி இருக்கிறார்.

முந்தானை முடிச்சு வெற்றி விழா நிகழ்ச்சி. முதல்வர் எம் ஜி ஆர் அனைவருக்கும் தங்க மோதிரம் அணிவிக்கிறார். இளையராஜாவுக்கோ தங்கம் அணியும் பழக்கம் இல்லை. நாமாக இருந்தால் , மறுக்காமல் வாங்கி கொண்டு வேறு யாருக்கேனும் கொடுத்து இருப்போம். ஆனால் அவ்ரோ எம் ஜி ஆரிடம் அதை வாங்க மறுக்கிறார். எம் ஜி ஆருக்கு கவுரப்பிரச்சினை ஆகி விடுகிறது.. கோபத்துடன் அவர் விரலில் அணிவித்து விடுகிறார். அதற்கு இளையராஜாவின் எதிர் வினை நம்ப முடியாதாது. ஆனால் உண்மையில் நடந்தது.

அன்று அது பரபரப்பான செய்தியாக இருந்தது, மங்கலாக நினைவுக்கு வருகிறது ( அப்போது நான் குட்டிப் பையன் ) அதன் பின் வேறு சில விவகாரங்களிலும் எம் ஜி ஆருடன் மோதல் ஏற்பட்டதை , சொல்லி இருக்கிறார். ஆனால் அதை எல்லாம் மனதில் வைத்து கொள்ளாமல் , இளையராஜா வீட்டி நிகழ்ச்சியில் எம் ஜி ஆர் கலந்து கொண்டது ( உடல் நலம் சரியில்லாத நிலையில் ) வரலாறு..

அதே போல சிவாஜியுடன் கொண்டு இருந்த நெருக்கமான உறவையும் , பாசத்தையும் சொல்லும் இடம் நெகிழ வைக்கிறது. சிவாஜி மறைந்ததை அறிந்து இவர் உடல் நலம் சீர்கெட்டதையும், அதை பொருட்படுத்தாமல் மும்பையில் இருந்து வந்ததையும் சொல்லி இருக்கிறார். இறுதி ஊர்வலத்தில் ரஜினிக்கு அவர் அட்வைஸ் ஒன்று வழங்கினார். அதை நானும் பின் பற்றுகிறேன். ரஜினி இளையராஜாவை சாமி என அழைப்பதும், இளையராஜா உரிமையுடன் ரஜினிக்கு அட்வைஸ் வழங்குவதும், அதை ரஜினியும் அடக்கத்துடன் கேட்பதும் வியப்பாக உள்ளன.

அதே போல கமலுடனான அனுபவத்தையும் சொல்லி இருக்கிறார். ஹே ராம் படத்துக்கு முதலில் இன்னொருவர் இசையமைத்து பாடல் காட்சிகளும் படமாகிவிட்டன, ஆனால் சில காரணங்களுக்காக அந்த இசை அமைப்பாளருக்கும் கமலுக்கும் ஒத்து போகவில்லை. எனவே இளையராஜாவை அணுகி பின்னணி இசை அமைத்து தருமாறு கேட்கிறார். பின்னணி இசை மட்டும் தனியாக செய்ய முடியாது என ராஜா மறுக்கிறார். சரி . பாடலும் நீங்களும் செய்யுங்கள்.. ஏற்கனவே எடுத்த பாடல் காட்சிகளை தூக்கி போட்டு விட்டு , புதிதாக படம் எடுக்கலாம் என்கிறார் கமல். பணம் செலவானாலும் பரவாயில்லை என்று துணிகிறார் கமல். தேவையற்ற செலவை கமலுக்கு ஏற்படுத்த ராஜா விரும்பவில்லை. எனவே ஏற்கனவே எடுத்த பாடல் காட்சிகளுக்கு ஏற்ப , புதிதாக இசை அமைக்கிறார் அவர். ஒருவர் இசை அமைத்து எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு ஏற்ப இன்னொருவர் இசை அமைப்பது எவ்வளவு பெரிய சவால் !!! அதை செய்கிறார் ராஜா..

இப்படி ஏராளமான தகவல்கள் …

கவிதைக்கு பொய் அழகு , தர்மத்துக்கு பொய் அழகா என்ற தலைப்பில் ஒரு கட்டுரை. ஏதோ ஒரு கவிஞரை பற்றி எழுதி இருக்கிறார். அது எந்த கவிஞர் என தெரியவில்லை 🙂 தெரிந்தால் சொல்லுங்கள் ஒரு கவிஞரை அறிமுகப்படுத்தி வாய்ப்பளித்தாராம். ஆனால் தொடர்ந்து வாய்ப்பளிக்க முடியவில்லையாம். கவிஞர் உதவி கேட்டு கெஞ்சுவாராம். ராஜாவும் உதவினாராம்.. இந்த நிலையில், புது இசையமைப்ப்பாளரை காக்காய் பிடித்து , அந்த கவிஞர் பெரிய ஆள் ஆகி விட்டாராம். அதன் பின் அவர் நடந்து கொண்ட விதம் ராஜாவை செருப்பால் அடித்தது போல இருந்ததாம்.. யார் அந்த கவிஞர் ? : )

ஆப்பரேஷன் நடந்து , பேச முடியாத நிலையில் இருந்த போது ரஜினி படத்துக்கு விசில் மூலமே , விசில் அடித்து இசை அமைத்த செய்தி ஆச்சர்யமாக இருக்கிறது. அப்படி இசை அமைக்கப்பட்ட பாடல் என்ன ? ” ளிளி மகள் திதிதி மிமி மிமி செத்தாள் ” இதன் அர்த்தம் என்ன ? புத்தக கண் காட்சியில் இந்த புத்தகம் கிடைக்காவிட்டால், நானே சொல்லி விடுகிறேன் 🙂

பால் நிலா பாதை

இளையராஜா

அரும்பு பதிப்பகம்

சிறப்பம்சங்கள்

 • பாரதிராஜா, கமல்ஹாசன் முன்னுரைகள்
 • சிறுகதைகளைப் போன்ற கிராம அனுபவங்கள்
Advertisements
Posted in புத்தகம் | Leave a comment

பின் நவீனத்துவ பிதாமகனுக்கு பீர் அபிஷேகம்- அர்ச்சனை, சிறப்பு வழிபாட்டுடன் சாருவின் பிறந்த நாள்

கொண்டாட்டம் இலக்கியம் என்றால் ஏன் அலறுகிறோம்..? ஏன் நமக்கு பிடிப்பதில்லை. காரணம் இலக்கியம் என்றால் கடினமானது , வாழ்க்கைக்கு தேவையில்லாத ஒன்று என்ற எண்ணம் நம் மனதில் பதிந்து விட்டதுதான்.

இந்த நிலை ஏற்பட இலக்கியவாதிகளும் ஒரு காரணம். ஒருவர பிரபலமாகி விட்டால் , அவரை இலக்கியவாதி என ஏற்க மறுப்பது, எளிமையான எழுத்துக்களை ஏற்க மறுப்பது , ஆழமான விஷ்யங்களை தெரிந்து கொள்ள எந்த முயற்சியும் செய்யாமல் , குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது , வேறு மொழி இலக்கியங்கள் அறியாமல் இருப்பது போன்றவையே , தமிழக இலக்கியவாதிகளின் அடையாளமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் வெளி வந்த சீரோ டிகிரி , ஒரு புதிய வகை எழுத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்துயது. இளைஞர்கள் கொஞ்சம் தமிழையும் வாசிக்க தொடங்கினர், பின் நவீனத்துவம், சார்த்தர் , போர்ஹேஸ் போன்ற பெயர்கள் சர்வசாதாரணமாக அனைவருக்கும் தெரிகிறது என்றால் அதற்கு முழு காரணம் அல்ட்டிமேட் ரைட்டர்தான் இண்டர் நெட் எல்லாம் அந்த காலத்திலேயே அவர் எழுதிய விஷ்யங்களைப்பார்த்தால் நமக்கெல்லாம் பிரமிப்பாக இருக்கிறது.

அப்போதெல்லாம் வாசிப்பு பழக்கம் இன்றைய நிலையை விட மோசமாக இருந்தது. அப்படி இருந்தும், அதைப்பற்றி கவலைப்படாமல், எல்லோருக்கும் பெய்யும் மழை போல , உயர்ந்த விஷ்யங்களை படைத்து வழங்கி வந்தவர் சாரு.. அவரை ஒருவர் போற்றுகிறார் என்றால் , சாரு என்ற தனி மனிதனை போற்றவில்லை. உழைப்பை, , படிப்பை, மொழி ஆளுமையை, சமுதாயத்தின் மேல் கொண்ட அன்பை, படைப்பு திறனை சாருவை வணங்குவதன் மூலம் வணங்கிறார் , போற்றுகிறார் .

அந்த வகையில், சாருவின் பிறந்த நாளை குரு பூஜையாக கொண்டாட , சிலர் விரும்பினார்கள்… பாத பூஜை செய்யவும் திட்டமிடப்பட்டது வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் கிடைத்தது போல இந்த மேட்டர் உருவானது. எக்ஸைல் விழா வெற்றிகரமாக நடந்தது உங்களுக்கு தெரியும். ஆனால் பொறாமை கண்களால் பாதிக்கப்பட்டு சில பாதிப்புகள் ஏற்பட்டது யாருக்கும் தெரியாது.. திருஷ்டி சுற்றி போடுதல் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இது தற்செயலாக தோன்றலாம். ஆனால் இது உண்மை என்பது அனுபவப்பட்டவர்களுக்கு தெரியும்..

எனவே குரு பூஜையை சாருவின் இல்லத்தில் நடத்தும் மாற்றப்பட்டு ஆலயத்தில் நடத்தப்பட்டது.. பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன இனிப்புகள் வழங்கப்பட்டன.. பீர் அபிஷேகம் , அர்ச்சனை, நெய் தீப வழி பாடு, எக்ஸைல் நூலுக்க்கு சிறப்பு ஆராதனை என தூள் கிளப்பப்பட்டது. ஆலயத்தின் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. முடிந்த வரை எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்கு,,,

Posted in புத்தகம் | 1 Comment

அல்ட்டிமேட் ரைட்டரின் எக்ஸைல் – பின் நவீனத்துவ ரகளை

தமிழக இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும் அளவுக்கு பிரமாண்டமாக நடந்தது அல்ட்டிமேட் ரைட்டரின் எக்ஸைல் நாவல் வெளியீட்டு விழா.

முன்பு ஒருவர் சாருவின் மீது கொண்ட பொறாமையை மனதில் வைத்து மட்டம்தட்டி வந்தார். ஆண்டுக்கு 80 புத்தகங்கள்தான் விற்கின்றன என கணக்கு காட்டி ஏமாற்றினார்.

அவர் ஒட்டு மொத்தமாக விற்ற புத்தகங்களின் எண்ணிக்கையை விட , விழா அன்று விற்ற புத்தகங்களின் எண்ணிக்கை பல மட்ங்கு அதிகம். இந்திரா பார்த்தசாரதி பாராட்டு மழையில் புத்தகத்தை நனைத்தார். பேசி முடிந்து இருக்கைக்கு திரும்பியவர், மீண்டும் எழுந்து வந்து பாராட்டினார்.

பேசும் ஐடியா இல்லாமல் வந்த மதன், சாருவின் வேண்டுகோளுக்கிணங்க, குறிப்புகள் ஏதும் இல்லாமல் மனமார நாவலை பாராட்டினார். இப்படி எத்தனையோ சாதனைகளை வெளிவரும் முன்பே எக்சைல் செய்தது

ஆனால் ஒரு வாசகன் படிக்க ஆரம்பிக்கும்போது, இந்த அம்சங்கள் எல்லாம் அவன் கணக்கில் வராது. தன் கையில் தவழும் புத்தகம் , அவன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா இல்லையா என்பதே கேள்வி.

எனவே விருப்பு , வெறுப்பு என்றி இந்த நாவலை அலசுவது நம் கடமை. இந்த நாவல் என்ன சொல்கிறது? எப்படி சொல்கிறது? ஒரு சாராசரி வாசகனின் பார்வையில் நாவல் எப்படி இருக்கிறது?

பார்க்கலாம்..

முதலில் ஒன்று சொல்லி விடுகிறேன். இது வரை வந்த தமிழ் நாவல்களில் இது சற்றே வேறுபட்டது.

இது ஒரு த்ரீ இன் ஒன் நாவல். இதை நீங்கள் ஒரு கட்டுரைத்தொகுப்பாக படிக்கலாம்.. சுய சரிதையாயாக படிக்கலாம். அல்லது நாவலாகப் படிக்கலாம்.. எப்படி படித்தாலும், சுவாரஸ்யமாகவும் பலன் மிக்கதாக இருக்கும் என்பதே இதன் சிறப்பு.

கட்டுரை தொகுப்பாக படித்தால் ஏராளமான விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன, வாழ்வில் வெற்றி பெறும் சூத்திரங்கள், மருத்துவ குறிப்புகள், வயகாரவை மிஞ்சும் வீரிய விருத்து லேகியம் சில சமையல் குறிப்புகள், முக்கிய புத்தங்கள் பட்டியல், ஆன்மீக குறிப்புகள், சித்தர் பற்றிய குறிப்புகள், தரிசிக்க வேண்டிய ஆலயங்கள், தரிசிக்க வேண்டிய முறைகள், இஸ்லாமிய சுஃபி மகான் பற்றிய குறிப்புகள் , மது வகைகள் , பின் நவீனத்துவம் என்றால் என்ன என்பதற்கு விளக்கம் என ஒவ்வொரு பக்கமும் தகவல் சுரங்கம். அம்ர்ந்தால் ஒரே மூச்சில் அரை நாளில் படித்து விடலாம்.

சுய சரிதையாக படித்தால், ஓர் எழுத்தாளனின் உழைப்பு , அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என ஒரு சர்வதேச தரத்திலாம சுயசரிதை புத்தகம் படித்த திருப்தி கிடைக்கும்.,, ஆனால் இது முழுமையான சுய சரிதை நூல் அன்று என்பதால், இந்த கோணத்தில் படிப்பது நாட் ரெகமெண்டட்.

இந்த கோணத்தில் படித்தாலும், ஒரே அமர்வில் படித்து முடிக்கலாம்

நாவல் என்ற கோணத்தில் படித்தால்தான் , எக்ஸைலின் முழு வீச்சயும் உள்வாங்க முடியும். ஆனால் இப்படி படித்தால் அரை நாளிலெல்லாம் படிக்க முடியாது, படிக்கவும் கூடாது. காரணம் இந்த நாவல் வாசகனின் உழைப்பையும் கோருகிறது. சவால் விடுகிறது. நாவலை ஆரம்பித்தால் ஜெட் வேகத்தில் செல்லும்தான். ஆனால் கஷ்டப்பட்டு பிரேக் போட்டு நிறுத்தி ஆங்காங்கு சற்று எழுத்தை முழுமையாக உள்வாங்க வேண்டும். நானெல்லாம் சிலவற்றை நிபுணர்களுடன், நண்பர்களுடன் பல பகுதிகளை விவாதித்த பின்பே அடுத்த பகுதிக்குள் சென்றேன்.

உதாரணமாக ஓர் இடத்தில், லக்காம் சொல்லும் woman does not exist கோட்பாடு பற்றி தெரியுமா என கேட்டு விட்டு நாவல் தொட்ரகிறது. அந்த கோட்பாடு தெரியவில்லை என்றால் , அது என்ன என தெளிவு படுத்திக்கொண்டு நாவலை தொடர்ந்தால்தான் நல்லது. சும்மா ஸ்கிப் செய்து விட்டு சென்றால் அந்த பகுதியின் அர்த்தம் சரிவர புரியாது மேலோட்டமாக படித்தாலும் நன்றாக இருக்கும்தான். ஆனால் இப்படி படித்தால் சாரத்தை இழந்து விடுவோம்.

கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறோம். மீன் பிடித்து திரும்பி விடலாம். இன்னும் கொஞ்ச தூரம் போனால் , விலை உயர்ந்த பொக்கிஷங்கள் கிடைக்கும் என்றால் , கூடுதல் எஃபோர்ட் கொடுக்கலாம் அல்லவா? எது போல கொஞ்சம் எஃபோர்ட் கொடுத்தால், நாவலில் பல புதையகல்கள் அள்ளலாம்.

எக்சைல் என்ற பெயரே ஆழமான அர்த்தம் கொண்டது. நாடு கடத்தப்படல் என்பது இதன் பொருள். மரண தண்டனையை விட கொடுமையானது இது. பல சந்தர்ப்பங்களில் நாடு கடத்துதல் என்பது நேரடியாக இருக்காது. படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கிறீர்கள். வீட்டில் அவமானப்படுத்துகிறார்கள் என்றால் வீடை விட்டு வெளியேறுவீர்கள். அது ஒருவகை எக்சைல்தான்.

மயக்கம் என்ன படத்தில் தனுஷ் அனுபவிப்பது ஒரு வகை எக்சைல்தான். அதே போல தமிழ் நாட்டில், எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், சொந்த நாட்டுக்குள்ளேயே எக்சைல் வாழ்க்கை வாழ்கின்றனர் என்பது ஒரு கோணம். ஒரு நடிகனுக்கோ , அரசியல் தலைவனுக்கோ பால் அபிஷேகம் செய்கிறீர்கள் என வைத்து கொள்ளுங்கள், யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.

ஓர் எழுத்தாளனுக்கு அப்படி செய்ய நினைத்தால் தொலைத்து விடுவார்கள். எழுத்தாளன் என்றால் அடங்கி இருக்க வேண்டும்,. அவனுக்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம். ஆச்சாரம் கெட்டு விட்டது என ரகளையே நடக்கும். ( இதை மீறும் பொருட்டு, இலக்கியவாதிகளின் அடையாளத்தை பிரதிபலிக்கும் ஆடையை சாரு தவிர்த்து விட்டு, வேறோர் உடையில் விழாவில் தோன்றியதை பார்த்து இருப்பீர்கள் )

இப்படிப்பட்ட சமூகத்தில் , சொந்த நாட்டிலேயே , நாடு கடத்தப்பட்டவன் போல வாழும் உதயா என்ற எழுத்தாளனின் கதைதான் எக்ஸைல்.

ஆனால் இது அவன் கதை மட்டும் அன்று. அவன் கோணத்தில் மட்டும் கதை சொல்லப்படுவதில்லை. தன் வீட்டிலேயே அடக்குமுறையை சந்திக்கும் அஞ்சலி, ஆதிக்க சாதியில் பிறந்த ஒருவன் , குப்பை அள்ளும் வேலையில் , ஏமாந்து போய் சேரும் நிலை, உதயாவின் மகள், அஞ்சலியை காதலிக்கும் உதயா ஒரு கட்டத்தில் தானே அவளை அடக்குமுறைக்கு உட்படுத்த நினைக்கும் வினோதம் , காரணமே இல்லாமல் துன்புறுத்தப்படும் சொறி நாய், தற்கொலைக்கு தூண்டப்படும் பூங்கொடி , சிறுவர்களின் விளையாட்டால் அல்லல்படும் வளர்ப்பு நாய் என பல்வேறு பாத்திரங்கள். ஒவ்வொன்றும் மறக்க முடியாதவை. ஒரு விதத்தில் இவர்களும் கூட புகலிட வாழ்வுதான் வாழ்கிறார்கள்.

ஒருவரை எந்த காரணமும் இல்லாமல் துன்புறுத்துவதை பல இடங்களில் பார்க்கிறோம். அன்பை போதிக்கும் ஆன்மீக வாதிகள்கூட அடக்குமுறையை பயன்படுத்துவதை நாவல் சுட்டிக்காட்டுகிறது..

இதை எல்லாம் பார்த்தால் , நாவல் ரொம்ப சீரியசாக இருக்குமோ என நீங்கள் நினைக்கலாம். அதுதான் கிடையாது. நாவலின் துவக்க பகுதியில் இருந்து , கிளைமேக்ஸ் வரை, துள்ளல்தான், ரகளைதான் , கொண்டாட்டம்தான். பொது இடங்களில் அமர்ந்து படிக்காதீர்கள். படித்தால் சிரிப்பை அடக்க முடியாது. எல்லோரும் உங்களை வினோதமாக பார்ப்பார்கள்.. குறிப்பாக 66 , 67 பக்கங்களை சிரிக்காமல் படிப்பவர்களுக்கு விருது கொடுக்கலாம்.

செம கிண்டல்.

ஆரூர் சிம்மன் சாமான்ய ஆள் அல்ல. மூன்று தமிழ்களுக்கு வேந்தராக கருதப்படும் அவர் தமிழ் மொழிக்கு ஆற்றி இருக்கும் தொண்டை ஃபெர்னினான்ந்த் தெ சஸூரோடும் , க்ளோத் லெவி ஸ்த்ராஸோடும் மட்டுமே ஒப்பிட முடியும்” என ஆரம்பித்து..

அப்போது முத்தமிழ் அறிஞர் செய்த ஒரு காரியத்தை நெல்ஸன் மண்டேலா கூட யோசித்து பார்த்து இருக்க மாட்டார் ” என்றும் “ அப்பாவித் தமிழ்ர்கள் மேல் ராணுவத்தாக்குதல் தொடர்ந்தது. இது பற்றி முத்தமிழ் அறிஞரிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் சொன்ன பதிலில்தான் நீங்கள் அவர் தமிழ் அறிவை புரிந்து கொள்ள வேண்டும் .அவர் சொன்னார் “ மழை விட்டும் , தூவானம் விடவில்லை . இப்பேர்பட்ட கீர்த்தியை கொண்ட முத்தமிழ் அறிஞருக்கும், கவிச்சக்கரவர்த்திக்கும் இடையேதான் இந்த ஆண்டின் பாரதிய ஞான பீட பரிசுக்கு போட்டி. உண்மையில் இதை நீங்கள் பாப்லோ நெரூதாவுக்கும் க்ளோத் லெவி ஸ்த்ராஸுக்கும் இடையேயான போட்டியாகவே எடுத்து கொள்ள வேண்டும் . இத்தகைய பின் நவீனத்துவ காமெடி நாடக சூழலில் “ என்று இரண்டு பக்கங்க்ளுக்கு பகடி என்றால் என்ன பாடம் எடுத்திருக்கிறார் சாரு.

இதை டைப் செய்யும்போது கூட என்னால் சிரிப்பை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை.

நடிகர் கமல் ஹாசனை ஆரம்பத்திலேயே கிண்டல் செய்து முடித்து விடுகிறார்.

சொய்ங் வாத்தியார், நிதானமில்லாமல் தண்ணி அடித்து விட்டு மணலில் கவிழ்ந்து கொள்ளும் ஞானம், கன்னமிட்டு என்று சொல்லி குழப்பும் விலை மாது, நாவலில் கலக்கும் கொக்கரக்கோவுக்கே பெப்பே காட்டும் சூப்பர் கொக்கரக்கோ, கொக்கரக்கோ கொடுக்கும் வினோத தண்டனை, BJ என்ற குட்மார்னிங் மெசேஜ், “ பாக்க முடியுது… முடியுது.. தூக்க முடியலயே என்ற அங்கலாய்ப்பு , பொது இடத்தில் உள்ளாடை அணியாமல் வந்த நடிகையை தொட மறுக்கும் பக்கிரி சாமி , முல்லா கதை , அரசர்- ஆடு மேய்ப்பவன் கதை , உறங்காவில்லி, கருவூரார், தந்தைக்கு எழுதும் ஆபாச கடிதம் என ரகளை செய்து இருக்கிறார் சாரு. சீரோ டிகிரியில் பயன்படுத்திய அவரது மேஜிக் எழுத்தை நாம் காணும் இடம் ஓன்று வருகிறது. அப்பப்பா. கிளாஸ். சதிப்பின்னலுக்குள் உதயாவை சிக்க வைக்கும் இடமும் , புராண சம்பவமும் இணைந்து ஓர் இடம் வரும். படிக்கும்போது வித்தியாசமான உணர்வை தரும். நாவலின் முக்கியமான் இடங்களில் ஒன்று இந்த பகுதி. திவாகர், பெரியார் படத்தை வைத்து இருக்கும் குருசாமி, நாய் கலவியை விடியோ எடுப்பவன் ( என் எடுக்க வேடனும் என்பதற்கு காரணம் இருக்கிறது , சிவா, கருவூரார் என ஒவ்வொரு கேரகடரும் நம் கண் முன் நடமாடுவது அவரின் எழுத்துக்கு வெற்றி இதை பாருங்கள் மது பான விருந்தின்போது ஒரு நண்பர் போர்ட்டிகோவிலேயே மூத்திரம் போனார். போதையாம். என்னங்கடா இது ? அதற்கு அட்டகாசமான பின் நவீனத்துவ விளக்கம் வேறு கொடுத்தார், அவர் அறையில் கிச்சன் , ஹால் , டாய்லெட் எல்லாம் அருகருகில் இருக்குமாம் . அந்த பழக்கத்தில் போய் விட்டாராம். சீரியசான ஒரு கதைக்களனை எடுத்து கொண்டு , பக்கத்துக்கு பக்கம் ரகளை செய்துள்ளார் சாரு. அஞ்சலியின் கதை மனதை உருக்குகிறது. வழக்கமாக , கதாசிரியர்கள் அஞ்சலியின் பார்வையில் இருந்தேதான் அனைத்தையும் பார்ப்பார்கள். ஆனால் , அஞ்சலி அதுவரை சொன்ன சம்பவங்களை , கொக்கரக்கோ தன் பாணியில் கிளைமேக்ஸில் சொல்லும் போது ஒட்டு மொத்தமாக வேறொரு பார்வை நமக்கு கிடைக்கிறது. ( மொத்தம் ஐந்து கிளைமேக்ஸ் ) ஆனால் யார் சொல்வது சரியான பார்வை என கதாசிரியர் எந்த முடிவையும் நம் மேல் திணிக்கவில்லை. ஒரு சம்பவம் நடக்கும்போதே இன்னொரு கோணத்தையும் சொல்லி , காலம் வெளி தர்க்கம் என அனைத்தையும் கடந்து செல்கிறது நாவல். உதாரணமாக அய்யப்பன் அருளால் ஒரு மாபெரும் அதிசயம் நிகழ்கிறது. ஆனால் அதே அய்யப்பன் கோயிலில் விபத்தும் நடக்கிறது. இரண்டையும் வெளிப்படையாக சொல்வது சூப்பர். அதே போல, சிலர் செய்த தவ்றுகளுக்கு பாம்பு தகுந்த பாடம் புகட்டுகிறது. ஆனால் இன்னொரு பகுதியில் எந்த தவறுமே செய்யாமல் பலர் துன்புறுகிறார்கள். சிவா குறித்து உதயா சொன்னது அனைத்தும் பொய் என கொக்கரக்கோ சொல்லும்போது, நாவலின் முழு வீச்சு புரிகிறது.. பக்கிரிசாமி எனும் ஆவி சொல்லும் கதை , கேசவன் எனும் யானையின் கதை என எத்தனை முறை படித்தாலும் திகட்டாத எண்ணற்ற விஷயங்கள் நாவலில் புதைந்துள்ளன. ******************************************************************* சரி..எனக்கு பிடித்த சில வரிகள்

 • அங்கே தத்துவவாதி என்றால் மிஷல் ஃபூக்கோ. இங்கே கமல்ஹாசன்,.காரணம் அவர்தான் சினிமாவில் நிறைய தத்துவங்கள் உதிர்க்கிறார்.
 • நீ பேண்டீஸ் போடு , போடாமல் இரு , அது உன் இஷ்டம், ஆனால் என் கோபம் என்னவென்றால்….
 • இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி , சஞ்சய் காந்தி ஆவிகள் இங்குதான் அலைகின்றன. ஆனால் எனக்குதான் அவர்களை சந்திக்க ஆர்வம் இல்லை. எங்கள் கட்சியை ஒழித்து கட்டிய கட்சியை சேர்ந்த ஆவிகள் ஆயிற்றே
 • முன் பின் தெரியாத ஒரு பெண்ணுடன் ( டபுள் மீனிங்தான் )எப்படி சாட் செய்ய வேண்டும்
 • கார்னிவலை எங்க ஊர்ல நடத்துங்க, எங்க ஊர்ல நடத்துங்க என சில வாச்கர்கள் யோசனை கூறினர். சரி நீங்க பொறுப்பு எடுத்து செய்ங்க என்றதும் அந்த பேச்சு நின்ற்து
 • சிவாஜியின் காதலிகள் அவருக்கு துரோகம் செய்து விட்டு, இன்னொருவரை கல்யாணம் செய்து கொள்ளும்போது, அந்த திருமணத்தில் பியானோ வாசிப்பார் சிவாஜி.அட அடா.. அப்படி ஒரு நடிப்பை மார்லன் பிராண்டோவால் கூட நடிக்க முடியாது
 • துறவை துறவுக்காக விரும்பி ஏற்பது வேறு. ஏதோ ஒன்றை வெறுத்து போய் இதை தேர்ந்தெடுப்பது வேறு
 • நானும் வாயே திறக்காமல் அழுத்தமாக இருக்கிறேன் ( என்னது . வாயே திறக்க மாட்டீர்களா – அடிப்பாவிகளா ! – கொக்கரக்கோ ) இந்த கொக்கரக்கோதான் நாவலின் ஹீரோ. இது போல அடிக்கடி கமெண்ட் கொடுப்பார்
 • கலவி என்பது சிறிய மரணம் ( la petit mort ) ” நான்
 • கடவுளை நம்புபவன். நம்பாதவன் மாதிரி நடிக்கிறேன். இல்லாவிட்டால் இந்தியாவில் எழுத்தாளனாக ஜீவிக்க முடியாது “
 • நம்முடைய மனதையும் , குணாம்சத்தையும், சிந்தனை போக்கையும் நிர்ணயிப்பதில் நாசிக்கு பெரும் பங்கு இருக்கிறது
 • எத்தனையோ தீர்த்தங்களை கண்டு வெற்றி கொண்ட கொக்க்ரக்கோவுக்கு, தன் கையில் இருக்கும் தக்கினியூண்டு தீர்த்தத்தை என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை *********************************************
 • பிளஸ் துள்ளல் நடை புதுமையான வடிவம் சமகால பிரச்சினையை அலசுவது ஏராளமான தகவல்கள் வாசகனை யோசிக்க வைப்பது நகைச்சுவையின் உச்சத்தை தொட்டு இருப்பது
 •  மைனஸ் ஃபிரெஞ்ச் கவிதைகள் வரும் இடங்கள் கதை வேகத்தை தடுக்கின்றன ( என் போன்ற தற்குறிகளுக்கு தமிழைத்தவிர வேறு ஏதும் தெரியாது ) சாட் விவகாரத்தில் , கதானாயகனை சிக்க வைக்கும் பெண்ணின் மோட்டிவ் குறித்து சரி வர விளக்கவில்லை. அந்த பெண்ணுக்கும் , கதானாயகனுக்கும் முன் விரோதம் இல்லை. யாரோ தூண்டி விட்டு தான் இது நடந்து இருக்கும். அந்த சதிகாரன் யார் என்பது விளக்கப்படவில்லை ***********************************************
 • வெர்டிக்ட் தமிழ் வாசிக்க தெரிந்த ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நாவல் ( குழந்தைகள் படிக்க கூடாது ) எக்சைல்- குறி தவறாத மிஸைல்
Posted in புத்தகம் | Tagged | 1 Comment

இஸ்லாம் அறிவியலுக்கு புறம்பானதா? ஓர் அலசல்

 

 
இஸ்லாமும் அறிவியலும் என்ற தலைப்பில் இப்போது எழுத வேண்டிய அவசியம் என்னவென நீங்கள் நினைக்கலாம்..

இதைப்பற்றி விவாதிக்க வேண்டியவர்கள் அறிவியல் அறிஞர்களும், இஸ்லாமிய அறிஞர்களும்தான். என் வேலை கவனிப்பது மட்டுமே.

ஆனால் நண்பர் ஒருவர் எனக்கு பின்னூட்டம் இட்டு இருந்தார். இஸ்லாம் என்பது அறிவியலுக்கு புறம்பானது என்பது அவர் வாதம்.

இதை நாகரிகமான வார்த்தைகளால் அவர் சொல்லி இருந்ததால் பின்னூட்டத்தை வெளியிட வேண்டி இருந்தது,  ஒருவருக்கு என்ன கருத்து வேண்டுமானாலும் இருக்கலாம். நாகரிகமாக சொன்னால் , அதை கேட்பது நம் கடமை. ஏற்கிறோமா இல்லையா என்பது வேறு விஷ்யம்.

இப்படி பின்னூட்டத்தை வெளியிட்டு விட்டதால் என் கருத்தையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பின்னூட்டத்தை ஏற்கிறேனா இல்லையா என்பதை சொல்லி ஆக வெளிப்படையாக சொல்லாமல் , கள்ள மவுனம் சாதிக்கும் கபட நாடகத்தை நான் விரும்பவில்லை.

சரியோ தவறோ , யாரும் ஏற்கிறார்களோ இல்லையோ, என் கருத்தை சொல்லியாக வேண்டும்.

சொல்கிறேன்.

  ஒரு கால கட்டத்தில் அறிவியல் என்பது மிகப்பெரிய விஷயம். அறிவியல் பூர்வ உண்மையே முழு உண்மையாக , இறுதி உண்மையாக ஏற்கப்பட்டது.

ஆனால் இன்றைய நிலையில் இறுதி அறிவியல் உண்மை என்று எதுவும் இல்லை.
ஒரு காலத்தில் பூமி தட்டையானது என்று அனறைய அறிவியல் அறிஞர்கள் சொன்னார்கள். அதற்கு நிரூபணமும் காட்டினார்கள்.

ஆனால் சில ஆண்டுகளில் அது தவறு என கண்டறியப்பட்டு அந்த “ அறிவியல் “ உண்மைகள் தூக்கி எறியப்பட்டன.

சென்ற மாதம் வரை ஐன்ஸ்டீனின் கொள்கைகள் வேத வாக்காக இருந்தன, ஒளியின் வேகத்தை விட எதுவும் செல்ல முடியாது என கருதப்பட்டது.

ஆனால் இன்றைய நவீன கருவிகள் மூலம் அந்த கொள்கைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஆக, அறிவியல் சொல்லும் “ உண்மைகளை “ வைத்து எந்த முடிவுக்கும் வர இயலாது.

இன்றைய நிலையில் அது உண்மை என்ற அளவுக்கே அறிவியலுக்கு மரியாதை.

இது என் கருத்து அன்று.

ஸ்டீவன் ஹாக்கிங் தன் நூலில் ( கிராண்ட் டிசைன் ) இப்படி சொல்கிறார்.

இப்போதைய கருவிகளின் திறனுக்கேற்ப, இப்போதைய நம் அறிவுக்கேற்ப சில உண்மைகளை கண்டு பிடிக்கிறோம். ஆக அறிவியல் உண்மை என்பது, சில விசேஷ சூழ்னிலைகளுக்கு உட்பட்ட உண்மை என்பது அவர் கருத்து,
இது உறுதியானதோ, இறுதியானதோ அல்ல.

ஆனால் ஆன்மீக நூல்கள் கூறும் உண்மைகள் இறுதியானவை.

ஆனால் நாம் செய்யும் தவறு என்னவென்றால், அறிவியல் செய்திகளை அவற்றில் நேரடியாக தேடுவதுதான்.

e= mc2 என்ற ஃபார்முலாவை அதில் தேடினால் கிடைக்காது.  அவற்றின் நோக்கம் அறிவியல் பாடம் நடத்துவது அல்ல.. வாழ்க்கையை போதிக்கின்றன அவை, அறிவியல் உண்மைகள் ஆங்காங்கு சொல்லப்படுகின்றன.

அந்த அறிவியல் உண்மைகள் , சைன்ஸ் பாடத்தில் இருப்பது போல நேரடியாக இருக்காது. ஏனென்றால் அவை அறிவியல் பாட புத்தகம் அல்ல.

ஓகே.. இந்த குர் ஆன் வசனத்தை கவனியுங்கள்.

வானமும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும் , அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் , ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து  நாமே அமைத்தோம் என்பதையும் , மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? ( 21.30 )

இதை சாதாரண ஒருவர் படித்தால் , கவிதை போல தோன்றும். ஆனால் சற்று அறிவியல் நூல்களை படித்தவர்களுக்கு வேறோரு கோணம் புலப்படும்.

50 ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியல் புத்தகங்கள் படித்தால் ஒன்றும் புலப்படாது. லேட்டஸ்ட் புத்தகங்கள் படித்தால் , ஆச்சர்யமாக இருக்கும்

உன்மையில் ஒரு காலத்தில் எல்லாம் இணைந்துதான் இருந்தன என்கிறார் ஹாக்கிங்.

ஒரு கட்டத்தில் பிரிந்தன. ஏன் பிரிந்தன.. பிரிய வேண்டும் என ஏன் தீர்மானித்தன என்பது புரியவில்லை என்கிறார் அவர்.

இந்த பின்னணியில் மேற்கண்ட வசனத்தை பாருங்கள்..

தண்ணீரில் இருந்து என்பதும் முக்கியமானது. உயிரிகள் தண்ணீரில் இருந்துதான் தோன்றின என்கிறது அறிவியல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வசனத்தை பாருங்கள்

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும் , பூமியையும் இரண்டு நாட்களில் படைத்தான் ( 7.54 )

அது எப்படி இரண்டு நாட்களில் படைக்க முடியும் என மேலோட்டமாக படிப்பவர்களுக்கு தோன்றும்..

ஆனால் அறிவியல் படித்தவர்கள் இதில் இருக்கும் உள் அர்த்தத்தையும் , சொல் அழகையும் பார்த்து ஆச்சர்யப்பட முடியும்.

காலம் என்பது நாம் நினைப்பது போல மாறாத ஒன்று அன்று.

இந்த இடுகையை அரை  மணி நேரம் செலவு செய்து நான் டைப் செய்கிறேன். இதே அரை மணி நேரத்தில் நீங்கள் , உங்கள் மனைவி துணிகளை துவைத்து கொண்டு இருக்கலாம், பெண் தோழியிடம் பேசிக்கொண்டு இருக்கலாம். உங்களுக்கு அரை மணி நேரம் ஆகும்போது எனக்கும் அரை மணி நேரம் ஆகும் . தமன்னாவுக்கும் அரை மணி நேரம் ஆகும். நேரம் மாறாத ஒன்று என நினைக்கிறோம்.

தவறு.

ஒளியின் வேகத்தில் ஒருவர் செல்கிறார் என்றால் , அவரது அரை மணி நேரமும் , உங்கள் அரை மணி நேரமும் ஒன்றாக இருக்காது. உங்களுக்கு ஒரு வருடம் ஆகி இருக்கும், ஆனால் அவருக்கோ ஒரு மணி நேரமும் ஆகி இருக்கும்..

வகுப்பறையில் ஒரு மணி நேரம் , ஒரு யுகமாக தோன்றும். ஆண்தோழனுடன்

அல்லது பெண் தோழியிடம் பேசும் போது ஒரு மணி நேரம் , ஒரு நிமிடன் போல தோன்றும். அது வேறு. இது வெறும் தோற்றம்தான்.

சில சூழ் நிலைகளில் உண்மையாகவே காலம் , ஒவ்வொருவருக்கும் மாறக்க்கூடும்.
அந்த வகையில், மேற்கண்ட வசனத்தில் வரும் இரண்டு நாட்கள், நாம் அன்றாட வாழ்வில் காணும் இரண்டு நாட்கள் அல்ல.

இதை பாருங்கள்

வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம்.  நிச்சயம் அவற்றை விரிவாக்கம் செய்பவராவோம். ( 51.57 )

இதையுமே சென்ற நூற்றாண்டு அறிவியல் அறிஞர்கள் கிண்டல் செய்து இருக்க கூடும்.

ஆனால் இன்றைய அறிவியல் , பிரபஞ்சம் விரிவடைந்து வருகிறது என்கிறார்கள்.

இதை எல்லாம் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது.

பூமி , வானம் எல்லாம் எப்போதுமே இருந்து வருகின்றன என்பது சிலர் வாதம். அப்படி இருக்க வாய்ப்பில்லை என்கிறது இன்றைய அறிவியல்.

சில வசனங்கள் , அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளன என்பது உண்மைதான், ஆனால் வருங்கால அறிவியல் அவற்றையும் உண்மையாக்கும் . அப்படித்தான் இது வரை நடந்துள்ளது.

என்னை பொறுத்த வரை குர் ஆன் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் உரியது அன்று. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய, கற்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய ஒன்று.

Posted in ஆன்மீகம் | Leave a comment

டிசம்பரில் , இலக்கியத்துக்கு குரு பூஜை – பிரேக்கிங் நியூஸ்

மாதா , பிதா , குரு அதன் பின் தெய்வம் என்பது இந்திய மரபு. ஆனால் ஆங்கிலேயர் ஆட்சி மற்றும் ஐரோப்பிய பாதிப்பில் அந்த நிலை இன்று மாறி விட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு கூட ஆசிரியர்கள் என்றால் மாணவர்களுக்கு ஒரு மரியாதை இருக்கும் நிலை இருந்தது . இன்று ஆசிரியர் என்பது ஒரு பணியாளர் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களும் முன்பு போல அளவு கடந்த உரிமை , அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. தன் பணியை முடித்தோமா சென்றோமா என இருக்க பழகிக்கொண்டு விட்டனர்.

 

இப்படி நாம் மறந்து போனவை ஏராளம். ஆங்கிலேயர் வரவால், இப்படி நாம் மறந்து போன பலவற்றை நமக்கு அறிமுகப்படுத்தும் நாவலை எழுதி முடித்துள்ளார் இறைவன் நமக்களித்த இதயக்கனியான அல்ட்டிமேட் ரைட்டர் சாரு அவர்கள்.

 

இது சுய முன்னேற்ற் நூலா, ஆன்மிக் பெட்டகமா , இலக்கிய கருத்துக்களை சுமந்து வரும் ஒட்டகமா, இலக்கியத்தின் உச்சமா, இறைவன் நமக்களிக்க மறந்த உன்னதங்களின் மிச்சமா , நவீன எழுத்தை தமிழுக்கு கொண்டு வரும் ஒப்ப்ற்ற முயற்சியா என்பதை எல்லாம் என்னால் மதிப்பிட முடியாது. ஆன்றோர்களும் சான்றோர்களும்தான் மதிப்பிட முடியும். இலக்கிய உலகின் இறைவனான சாருவுக்கு நம்மால் எந்த கைமாறும் செய்ய இயலாது.

 

ஆனால் நம் அவர் மேல் வைத்து இருக்கும் மரியாதையை எந்த வகையிலாவது காட்டியாக வேண்டும். அவர் மேல் நாம் காட்டும் மரியாதை சாரு என்ற தனி நபர் மேல் காட்டும் மரியாதை அன்று.

 

அவருக்கு செலுத்தும் மரியாதை , தமிழுக்கு செலுத்தப்படும் மரியாதை, இலக்கியத்துக்கு செலுத்தப்படும் மரியாதை, நம் பண்பாடுகளுக்கு செலுத்தப்படும் மரியாதை

ஏன் அப்படி சொல்கிறேன்?

விளக்குகிறேன் நம் ஊரில் அறிவு ஜீவி என பெயர் எடுக்க சில டெம்ப்ளேட் ஃபார்முலாக்கள் உள்ளன.

 • தன்னை நாத்திகவாதியாக காட்டிக்கொள்வது
 • வாசகனை மதிக்காமல் இருப்பது
 • எதையும் படிக்காத அறிவிலியாக இருந்து கொண்டு , தமிழ் கலாச்சாரம் என உதார் விடுவது
 • உலக இலக்கியம் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் , மேம்போக்காக பழம் பெருமை பேசுவது
 • ஆளும் கட்சி எது செய்தாலும் திட்டுவது அல்ட்டிமேட் ரைட்டர் இது எதையும் செய்வதில்லை தன் எழுத்தால், தன் அறிவால், தன் உழைப்பால் மட்டுமே மக்கள் மனதில் நிற்கிறார். அவர் உழைப்பு , தமிழ் ஆளுமை , உலக இலக்கிய ஞானம் எல்லாம் போற்றத்தக்கது. வணங்கத்தக்கது.. நாம் எதை வணங்குகிறோமோ, அந்த குண்ங்கள் நம்மிடமும் வளரும் என்பது மனோதத்துவ உண்மை அந்த அடிப்படயில், எழுத்துலக விடி வெள்ளி சாருவின் பிறந்த நாளான டிசம்பர் 18 ல் குரு பூஜை செய்ய இருக்கிறோம் ஆன்மிக மரபு சார்ந்த பூஜையாக இது இருக்கும் இது குறித்த மேலதிக விபரங்கள் , அடுத்த பதிவில்…
Posted in Uncategorized | Tagged | Leave a comment

டாப் டென் வாதங்கள்- அறிவு கொழுந்துகளின் அணு உலை, நூலக நிலைப்பாடு

கூடன் குளம் அணு உலை பிரச்சினை, அண்ணா நூலக இட மாற்ற பிரச்சினைகளில் சில அறிவு கொழுந்துகள் செய்யும் அழிச்சாட்டியங்களைப் பார்த்தால் இவர்கள் புரிந்து செய்கிறார்களா இல்லையா என்ற குழப்பமே மிஞ்சுகிறது. இரண்டு தரப்பினரும் எடுத்து வைக்கும் வாதங்கள்கூட ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. அவ்ர்களின் கருத்து வெள்ளங்கள் – உங்கள் பார்வைக்கு,

அணு உலை ஆதரவாளர்கள்
 நூலக இட மாற்ற எதிர்ப்பாளர்கள்
1 அணு உலையை மூடக்கூடாது
1  நூலகத்தை இடம் மாற்ற கூடாது
2 அணு உலை இந்தியாவின் கவுரவ சின்னம்
2 இந்த நூலகம் தமிழகத்தின் கவுரவ சின்னம்
 3 வல்லரசு ஆக வேண்டுமென்றால் சிலர் உயிர் தியாகம் செய்துதான் ஆக வேண்டும். தமிழர்கள் சிலர் செத்தால் என்ன ? இந்தியா வல்லரசு ஆகிறதே..அது போதும்
 3 நலிந்த மக்களின் நிதியை இந்த ஆடம்பர நூலகத்துக்கு பயன்படுத்தியதில் தவறு இல்லை. அவர்கள் தியாகம் செய்துதான் ஆக வேண்டும்
 4 நவீன கருவிகள். வசதிகள் கொண்ட இந்த உலையை மூட மனம் வரவில்லை. மக்களை விட கட்டடம்தான் முக்கியம்
5 இதை கட்டும்போதே ஏன் எதிர்க்கவில்லை
6 இதை கட்டி இருக்க கூடாது. கட்டிய பின் இடிக்க கூடாது
7 வேண்டுமென்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு பணம் கொடுத்து விடலாம்
8 இந்த அணு உலையை மூடுவோம் என தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. இப்போது மூட முயற்சித்தால் தவறு
9 சில எலும்பு துண்டுகளுக்கு ஆசைப்பட்டு அணு உலையை ஆதரிக்கவில்லை
10 அணு உலையைப்பற்றி புரிந்து கொண்டுதான் , இதை ஆதரிக்கிறோம்.
 4 மக்களுக்கு பயன்பட்டால் என்ன .இல்லாவிட்டால் என்ன ? வசதியும் , அழகும் கொண்ட இந்த நூலகத்தை மாற்றக்கூடாது
5 இதை கட்டும்போதே ஏன் எதிர்க்கவில்லை
6 இதை கட்டி இருக்க கூடாது. கட்டிய பின் இடிக்க கூடாது
7 வேண்டுமென்றால் நலிந்த மக்களிடம் இருந்து திருடப்பட்ட பணத்தை , அந்தந்த நூலகங்களுக்கு திருப்பி கொடுத்து விடலாம்
8  இந்த  நூலகத்தை இடம் மாற்றுவோம் என தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. இப்போது மாற்ற  முயற்சித்தால் தவறு
9 சில எலும்பு துண்டுகளுக்கு ஆசைப்பட்டு இந்த ஊழல் கட்டடத்தை ஆதரிக்கவில்லை
10 நூலக சட்டம், மக்கள் வசதி என எல்லாவற்றையும் புரிந்து கொண்டுதான் , இதை ஆதரிக்கிறோம்

 

Posted in Uncategorized | Tagged | Leave a comment

காமம் காதல் கபடி ஆட்டம் : அனல்காற்று – ஜெயமோகன்

ப்ரியா மணி அல்லது மாளவிகா  ஆகியவர்களில் ஒருவர் நடிக்க  , பாலுமகேந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்க வேண்டிய திரைப்படம் அனல் காற்று. அதற்காக ஜெயமோகன் கதை எழுதினார். சில காரணங்களால் படம் எடுக்க முடியவில்லை.
படமாக வந்து இருந்தால் ஓடி இருக்குமா? ஜெயமோகன் சிறந்த நாவல்களில் இது ஒன்றா? படித்தே தீர வேண்டிய நாவலா?
பார்க்கலாம்.ப்ரியா மணி , மாளவிகா அல்லது நக்மா ஆகியவர்களில் ஒருவர் நடிக்க  , பாலுமகேந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்க வேண்டிய திரைப்படம் அனல் காற்று. அதற்காக ஜெயமோகன் கதை எழுதினார். சில காரணங்களால் படம் எடுக்க முடியவில்லை.
படமாக வந்து இருந்தால் ஓடி இருக்குமா? ஜெயமோகன் சிறந்த நாவல்களில் இது ஒன்றா? படித்தே தீர வேண்டிய நாவலா?
பார்க்கலாம்.
எல்லோருக்கும் தெரிந்த , தெரிந்து கொள்ள விரும்புகின்ற ஆனால் தெரிந்து கொள்ள முடியாத ஒரு விஷ்யத்தைப் பற்றிதான் நாவல் பேசுகிறது.
காதல். காம்ம்
காமம் இல்லாத காதல் உண்டா?   காதல் இல்லாத காமத்திற்கு பின் ஏதேனும் மனோதத்துவ பிரச்சினைகள் உள்ளனவா? காமம் , காதல் இரண்டுமே இல்லாமல் வாழ முடியாதா?
பல குற்றங்களுக்கு இவைதானே காரணங்களாக இருக்கின்றன. அல்லது இவை பற்றிய புரிதல் இன்மை காரணமாக உள்ளது.
இந்த பிரச்சினைக்ளை அலசும் நாவல்தான் அனல் காற்று.
வழக்கமான ஜெ மோ நாவல்கள் போலல்லாமல் எளிய கதை போக்கு. நேரடியான கதை.  சீரான கதை ஓட்டம் என்ற பாணியில் கதை செல்கிறது. ஜெ மோ நாவல்தானா என்று கூட அவ்வபோது சந்தேகம் வருகிறது.
அருண், சுசீ, சந்திரா, அருணின் அம்மா ஆகியோரை அடிப்படையாக கொண்ட கதை.
அருணின் அப்பாவுக்கு மற்ற பெண்கள் தொடர்பு இருப்பதால், அவரை விட்டு விலகுகிறாள் அம்மா. அருணை தானே வளர்க்கிறாள். அருணை அவன் அப்பா போலல்லாது “ நல்லவனாக” வளர்க்க முயல்கிறாள். அவனோ தன் தந்தை பாணியில்,  வயதில் மூத்த – கணவனை இழந்த – சந்திராவுடன் காதல்/ காம வயப்படுகிறான். தன் கணவனுக்கு  எந்த தவறான தொடர்புகளும் இருக்க கூடாது என்ற கனவுடன் இந்தியா வரும் அருணின் முறைப்பெண் சுசீலா மீதும் இவனுக்கு காதல் ஏற்படுகிறது.
அதே நேரத்தில் சந்திரா மீதான காதலும் போகவில்லை. சுசீலாவோ இவனை காதலிக்கிறாள். சந்திராவும் காதலிக்கிறாள். சந்திராவுக்கு வளர்ந்த வயதில் ஒரு பையன் இருக்கிறான்.
காதல் என்றால் என்ன? எந்த காதல் ஜெயித்தது என்பது கதை.
இந்த நாவலின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் எளிமையான கதையோட்டமும் , மொழி ஆளுமையும்தான்.
காமத்தின் இன்னொரு எல்லை மரணம் என்பதை உணர்ந்து மரணத்தைப்பற்றியும் கூர்மையாக சுட்டிக்காட்டி இருப்பதுதான் , இந்த நாவலை அர்த்தமுள்ள நாவலாக்குகிறது.
வசதி குறைவான , கீழ்த்தட்டு மக்கள் வீடுகளைப்பற்றிய குறிப்புகள் அபாரம். வீட்டில் நுழைந்தால் பொருட்கள்தான் பெரும்பாலான இடத்தை அடைத்து கொண்டிருக்கும் போன்ற நுட்பமான பார்வைகள் , கதையை நேரடியாக பார்க்க வைக்கிறது.
பெரிய மைனஸ் பாயிண்ட் என்றால் , கதாபாத்திரங்கள் யதார்த்த உலகை விட்டு சற்று விலகி இருக்கிறார்க்ளோ என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றுவதுதான்.
இந்த நாவலின் அனைத்து கதாபாத்திரங்களும் கடைசியில் நல்லவர்கள் ஆகி விடுகிறார்கள். இது சற்றும் நடை முறையில் பார்க்காத ஒன்று.
அதே போல கிளைமேக்ஸ் சினிமாட்டிக்காக இருப்பது போல தோன்றுகிறது. சற்று முன்பே முடிந்து விட்ட  கதை, சுபமான முடிவுக்காக நீட்டப்பட்டு இருப்பது போல தோன்றுகிறது.
சந்திரா , அருணுக்கிடையே இருப்பது காதல் அன்று. வெறும் உடல் இச்சையும் அன்று. அது வேறு என உணர்வதுதான் கதையின் உச்சம். அதற்கு பிறகு பைக் சேசிங் , விமான பயணம் எல்லாம் செய்ற்கையாக உள்ளது.
அனல் காற்று ஓர் உச்சத்துக்கு சென்ற பின் , குளிர்ந்துதான் ஆக வேண்டும் என்பது இயற்கை விதி. அதே போல குளிர்ச்சிக்கு முன்பு, அதீத வெப்பத்தை சந்தித்துதான் ஆக வேண்டும் என்பதும் விதி.
ஒருவன் இயல்பான வாழ்க்கை வாழ்ந்தால், – தான் நினைப்பது போல வாழ்ந்தால் – இந்த இயக்கம் சுமூகமாக நடந்து முடிந்து விடும். ஆனால் அப்படி நடக்க முடியாமல் , சமூக குடும்ப அழுத்தங்கள் செய்து விடுவதால்தான் பல பிரச்சினைகள்.
இங்கே காதல் என்று வேறு ஏதோ ஒன்றைத்தான் நினைத்து கொண்டு இருக்கிறோம். பல காதல்களுக்கு எதிர்ப்பே தேவையில்லை. அதை அப்படியே அனுமதித்தால் , தானகவே அது உதிர்ந்து விடும்.
சில தவ்றான காதல்கள் , திருமணத்தில் முடிந்து பிரச்சினையில் முடிவதும் உண்டு.
அருணை பொறுத்த வரை எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்து விட்டது. சந்திராவுடனான அவன் உறவு , அது கிளைமேக்சை அடைவதற்கு முன்பே சிதைந்து இருந்தால், வாழ் நாள் முழுக்க அவன் அதை ஓர் இழப்பாகவே நினைத்து கொண்டு இருப்பான். அதே போல , அந்த உறவு திருமணத்தில் ( ? ! ) முடிந்திருந்தாலும், வாழ் நாள் முழுக்க வருத்தம்தான்.
அனல் காற்று- மழை என்ற இயல்பான நிகழ்ச்சி அவனுக்கு வாய்த்து விட்டது .
தனக்கு துரோகம் செய்த கணவன் , அனாதையாக சாக வேண்டும் என்ற மனைவியின் எதிர்பார்ப்பு இயல்பு. அந்த எதிர்பார்ப்பு பொய்யாகும்வண்ணம் , தந்தை குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கும் அருணின் கேரகடரும் இயல்பு. ஆனால் அந்த குடும்பத்துக்கு தானும் ஆதரவாக நின்று , ஆயிரம் அன்னைகளுக்கு சமமாக தோன்றும் சுசீ இயல்பாக சித்திரிக்கப்படவில்லை. சினிமாவை மனதில் வைத்து எழுதி இருப்பார் போல.
அந்த கேரகடர் உள்ள ஒரு பெண், தன் வருங்கால மாமியாரைத்தான் ஆதரித்து இருப்பாள்.
அதே போல, சந்திரா மனம் மாறுவது இயல்பு. ஆனால் தன் மகனுடன் பைக் சேஸ் செய்வது சினிமாவின் விறுவிறுப்பான கிளைமேக்சுக்காக என்பது தெளிவு. அவள் மகன் மட்டும் போய் இருந்தால் போதுமே.
இவை எல்லாம் நாவலில் முழுமையாக ஒன்றுவதை தடை செய்தாலும், உரையாடல்கள், மன ரீதியான அலசல்கள்,  நுட்பமான காட்சி அமைப்புகள் போன்றவை நாவலை தூக்கி நிறுத்துகின்றன. அப்பா, அவர் இரண்டாவது குடும்பம், நண்பன் ஜோ கேரகடர் போன்றவையும் வலு சேர்க்கின்றன
********************************************************************
எனக்கு பிடித்த சொல்லாட்சிகள்
1 வெள்ளை உடை அணிந்த பெண் கூட்ட ஆரம்பித்தாள். என்னை அவள் நெருங்கினால், கூட்டி தள்ளி விடுவாள் என அஞ்சினேன்
2 உனக்கு பிடிக்காத எதுவுமே உலகில் இல்லை என அறிந்தேன். ஏனெனில் உனக்கு உன்னைப் பிடித்து இருக்கிறது
3 “ லவர்ஸ்தான் எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க”  “ கல்யாண வாழ்க்கைக்கு ரிகர்சலோ ?”
4 பெண்ணின் அழகு என்பது ஆணின் கண்ணால் உருவாக்கப்படுவது. பார்த்ததும் நம்மை கவரும் பெண்ணின் அழகு மெல்ல மெல்ல நம் கண்ணில் குறைய ஆரம்பிக்கும். நாம் விரும்பி, அவ்விருப்பத்தால் ஒரு பெண்ணில் கண்டடையும் அழகு அப்பிரியத்துடன் சேர்ந்து வளரும்.
5 வில்லில் இருந்து அம்பு பாய்றப்ப, அம்பின் நிழலும் சேர்ந்து போகும். அம்பு நேரா போகும், நிழல் குப்ப, கூளம் ,மேடு பள்ளம் புரண்டு போகும் ,ஆனால் இரண்டும் போய் சேரும் இடம் ஒன்றுதான்
6 மரணத்தின் போது , ஒரு மனிதர் தன் முழுமையுடன் தெரிய வருகிறார்
7 அப்பாவின் படத்தை பார்த்தேன். அவர் இருந்த போது அந்த படம் அவர் போல இல்லை என தோன்றியது. இப்போது அது அவராகவே இருந்தது.
8ஸ்ட்ரா போட்டு இளனீரை உறிஞ்சறப்போ , ஒரு புள்ளில இளனீர் தீர்ந்து போச்சுனு தெரியற மாதிரி, உறவு முறிவது சட் என தெரிந்து விடும்
9 உண்மையான காதல்னா , காதலை கொடுப்பது மட்டும்தான்
**********************************************************************************
சிறந்த கேரக்டரைசேஷன்
சந்திராவின் பையன் நவீன்.. விளையாட்டு பையனாக, சாப்பாட்டு பிரியனாக சித்திரிக்கப்படும் அவனுக்கு எல்லாம் தெரிந்து இருக்கிறது, தெரியாத மாதிரி இருந்திருக்கிறான் என்பது செம ட்விஸ்ட். அவன் அம்மாவின் தவறான உறவை சிலர் சுட்டிக்காட்டும்போது, இதை பற்றி கவலைப்பட வேண்டியது என் அப்பா, அவருக்கு பின் நான் ..உங்களுக்கு என்ன என கேட்பதில் கம்பீரம், கதையின் கிளைமேக்ஸ் இதுதான். எனவே இந்த் கதையில் மனதில் நிற்பது இந்த கேரக்டர்தான்
**************************************************************************
வெர்டிக்ட் 
1 படிக்க வேண்டிய நாவல். படித்தே தீர வேண்டிய நாவல் அன்று

 

2 ஜெயமோகனின் உன்னத நாவல்களில் ஒன்றல்ல .
3 சினிமாவாக எடுத்து இருந்தால், சூப்பர் ஹிட் ஆகி இருக்கும்
******************************************
அனல் காற்று
ஜெயமோகன்
தமிழினி வெளியீடு
விலை ; ரூ 90
Posted in புத்தகம் | Tagged | Leave a comment