ரஜினியையே வீழ்த்திய தூஸ்ரா- ஒரு விடியா மூஞ்சி எழுத்தாளரின் கேஸ் ஸ்டடி

ரஜினி படங்களை ரஜினிக்காகவே மட்டும் ரசிப்பதால், அவர் படங்களில் யார் வசனம் என்பதை எல்லாம் அவ்வளவாக கவனிப்பதில்லை..

முதல் முறையாக பாட்ஷா படத்தில்தான், வசனகர்த்தா என்ற முறையில் எழுத்துச் சித்தர் பாலகுமாரன் கவனிக்கப்பட்டார்.

தமிழ் சினிமா வரலாற்றில் அதிக பட்ச எதிர்பார்ப்புடன் உருவான பாபா படத்துக்கும் எழுத்து சித்தர் எழுதுவதாக இருந்தது. ஆனால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு எழுத இயலவில்லை.

வேறு யார் எழுதப்போகிறார் என தமிழ் நாடே எதிர்பார்த்த நிலையில், எஸ் ராமகிருஷ்ணன் பெயர் அறிவிக்கப்பட்டது.. சரி. ஓர் இலக்கிய்வாதி எழுதுகிறார். எழுதட்ட்டும் என ரசிகர்கள் விட்டு விட்டனர்.

ஆனால் படம் வெளி வந்ததும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்த்னர். கொஞ்சம் கூட உயிர் துடிப்பற்ற வசனங்கள்.

படத்திற்கு வசனம் யாருமே எழுதாமல் , கதாபாத்திரங்கள் அவர்கள் இஷ்டத்திற்கு பேசி இருந்தால் கூட கொஞ்சம் சுவையாக இருந்திருக்கும் .ஆனால் இவர் எழுத்து படத்தையே கவிழ்த்து விட்டது.

தோல்வியையே பார்த்தறியாத ரஜினியே கொஞ்சம் கலங்கி போனார் . அதன் பின் எஸ் ரா போன்றோரின் சகவாசத்தை விட்ட பின்பு, மீண்டும் வெற்றிகளை குவிக்க தொடங்கினார் என்பது வரலாறு.

அதே போல , இயக்குனர் பாலா. பெரிய நடிகர்களின் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு போல , இவர் படங்களுக்கும் எதிர்பார்ப்பு இருக்கும்.
நான் கடவுள் படத்தை எல்லாம் நான் முதல் நாள் முதல் ஷோ பார்த்தேன்.

இவரும் தோல்வியே காணாதவர்.

முதல் முறையாக அவன் இவன் படத்தில் சறுக்கினார். வசனம் இந்த உருப்படாத எழுத்தாளர் என சொல்லவும் வேண்டுமா?

இவர் எழுத்தை யார் படிக்கிறார்கள் என்று கவனித்தால் உங்களுக்கே புரியும். வாழ்வில் தோல்வி அடைந்தவர்கள், தோல்வியை சந்திக்க இருப்பவர்கள், அழிவை ரசிப்பவர்கள் போன்றோர்தான் இவரின் வாசகர்களாக இருப்பார்கள்.

ஆல்பம், பாபா, பாப்கார்ன், உன்னாலே உன்னாலே, தாம் தூம் , மோதி விளையாடு, சிக்கு புக்கு, அவன் இவன், யுவன் யுவதி

இவை எல்லாம் இவர் பணியாற்றிய படங்கள்.

வெற்றி சதவிகிதத்தை நீங்களே கணக்கிட்டு பாருங்கள்..

இவர் நல்ல படிப்பாளி, சினிமா ரசிகர் , அறிவாளி , பேச்சாளர் என்பதெல்லாம் உண்மைதான்.

ஆனால் இவர் இருக்கும் இடம் உருப்படாது எனப்தும் அதே அளவு உண்மை.. அவர் புத்தகங்கள் இருக்கும் இடமும் உருப்படாது என்பதை சமீபத்தில்தான் உணர்ந்தேன்.

இவர் சொற்பொழிவை கேட்கலாம் என ரஷ்ய கலாச்சார மையம் சென்று இருந்தேன்.

அரங்கில் யாருமே இல்லை. இல்லாத சிலரும் தூங்கி வழிந்து கொண்டு இருந்தனர்.

அப்போதுதான் எனக்கு திடீரென நினைவு வந்தது.

ஆயிரம் ரூபாய் மதிப்பிலான எஸ் ரா புத்தகங்களை பைக்கிலேயே விட்டு விட்டு வந்து இருக்கிறேன்.
அவசரமாக எழுந்து ஓடினேன்.

அங்கு போய் பார்த்தால்..

புத்தகங்கள் அப்படியே இருந்தன. அங்கு கழட்டி போட்டு இருந்த என் பழைய செருப்புகளை யாரோ எடுத்து சென்று இருந்தனர்.

அவர் புத்தக மதிப்பு எல்லோருக்கும் தெரிகிறது , எனக்கு மட்டும் தெரியாமல் போய் விட்டதே என வருந்தினேன்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s