செக்ஸ்பியர்? தமிளை வலர்த்து வாள வைக்கும் அண்ணா நூலகம் – எக்ஸ்ளூசிவ் படங்கள்

சி சு செல்லப்பாவின் எழுத்தை படித்து நெகிழ்ந்ததை எழுதினேன், அவ்வளவு உன்னத எழுத்தாளரான அவர் தன் புத்தகங்களை விற்க மிகவும் கஷ்டப்பட்டாரம். கேள்விப்பட்டு வருத்தமாக இருந்தது.

இன்று அவர் இருந்திருந்தால் கண்டிப்பாக இணையம் அவருக்கு பேருதவியாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இதை எல்லாம் பார்த்தால், இப்படி கஷ்டப்படுவதை விட , யாராவது அரசியல் தலைவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு நன்றாக இருந்தால்கூட பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

ஆனால் இன்றைய அறிவு ஜீவிகள் , சூட்கேஸ் பெறும் சாமர்த்தியம் இன்றி , வெறும் சிக்கன் பிரியாணிக்கும் லெக் பீசுக்கும் மயங்கி , உளறிக்கொட்டுவது பரிதாபம்.

ஆனால் அவர்களை சொல்லி தவறில்லை அவர்களை பராமரிக்க , டாக்டர்கலைஞரும் , புரட்சி தலைவியும் போட்டி போட்டால் , அவர்களுக்கு டிமாண்ட் இருக்கும். பேரம் பேசலாம்.

ஆனால் ஜெ, இவர்க்ளை சீந்தாத நிலையில் கலைஞர் என்ன கொடுத்தாலும் ஏற்க வேண்டிய நிலை.

சாப்பிட்ட பிரியாணிக்கு வஞ்சகம் இல்லாமல் நன்றாகவே பேசினார்கள்.

அண்ணா நூலகம் ஒரு சொர்க்கலோகம், குறைகளே இல்லாத நூலகம் என்றெலாம் உளறினார்கள்.

இதற்கெல்லாம் ஏழைகளின் காசுதானே செலவாகிறது என்று கேட்டால் பதில் இல்லை.

இதனிடையே வெளியூர் நண்பர்கள் சிலர், நூலகத்தின் உண்மை நிலைதான் என கேட்டார்கள்..

பலரும் நக்கீரனை படித்து விட்டு ,  தாமே கண்டு பிடித்தது போல எழுதுவதால் , உண்மை நிலை தெரிவதில்லை. எனவேதான் கேட்கிறார்கள்

சொல்கிறேன்..

  • அங்கு வேலை செய்பவர்கள் சிறப்பானவர்கள். குறை சொல்ல கூடாது.
  •  நல்ல புத்தகங்கள் இருக்கின்றன
  • ஆனால் அனாவசிய செலவு ஏராளம்.
  • இதே நூலகம், இதே  ஊழியர்களோடு டி பி அய்யில் இருந்தால் , ஆயிரம் மடங்கு பலனுண்டு
இவ்வளவு செலவு செய்துமேகூட பணப்பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் பல்வேறு குழப்பங்கள்.
ஆங்கிலத்தில், ஷேக்ஸ்பியரை செக்ஸ்பிரியர் என எழுதுவார்களா? எழுதினால் அறிவுலகம் விட்டு விடுமா?
ஆனால் தமிழ் எழுத்தாளர்கள் பெயரகளை கன்னா பின்னாவென எழுதி வைத்து இருக்கிறார்கள் , இந்த உலகத்தர மிக்க நூலகத்தில்.அதை பிரியாணி மயக்கத்தில் எந்த ஒரு அறிவு ஜீவியும் சுட்டிக்காட்டவில்லை.
மேலும் பல்வேறு குளறுபடிகள்..
நீங்களே பாருங்கள்
அதென்ன கோத்த மங்கலம்? எதை  கோர்த்தார்?

 

மணாளனா? மனளனா?

 

பிச்சை மூர்த்தியா? அடப்பாவிகளா !!

 

அமுதல்?

 

புருஸ்?

 

அதற்குள் உடைத்து விட்டீர்களே

 

சமுத்திரம் இப்படி ஆகி விட்டார்

 

திலிபன்?

 

வல்லினம் வள்ளினம் ஆகி விட்டதே?
நான் இதற்கு ஊழியர்களை குறை சொல்ல மாட்டேன் .  வேலையில் தவறு நிகழ்வது இயல்புதான்.
தமிழ்  பேசும் இந்த அறிவு ஜீவிகள் இதை சுட்டி காட்டி  இருந்தால் , அவர்கள் உடனே சரி செய்து இருப்பார்கள்.
ஆனால் இந்த அறிவு ஜீவிகள் பிரியாணி சாப்பிடும் ஆர்வத்தில் 1 % கூட  மக்கள்  மீதோ தமிழ் மீதோ காட்டுவது இல்லை எனபதே நம் ஆதங்கம்
Advertisements
This entry was posted in புத்தகம் and tagged . Bookmark the permalink.

One Response to செக்ஸ்பியர்? தமிளை வலர்த்து வாள வைக்கும் அண்ணா நூலகம் – எக்ஸ்ளூசிவ் படங்கள்

  1. Nirmal says:

    Hi Pichchaikkaaran
    I want to tell you something that is Mr.Karunanidhi used to tell and write New York city as pudhiya york .No wonder if someone write Shakespere as sexpere in Tamil.Mr.Karunanaidhi accepted “Va ,Quarter Cutting ” is name of a movie in Semmozhi Tamil .He knows how to make millions of dollars in the name of Tamil as long as our tamil people are addicted to Quarters and Biriyanis.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s