ஞானி அவர்களுக்கு ஆறு கேள்விகள்- அண்ணா நூலக விவகாரம்

உயர் திரு ஞானி அவர்களுக்கு.. உங்கள் மீதும் , உங்கள் நேர்மை , துணிச்சல் மீதும் பெரும் நம்பிக்கை கொண்ட எளிய மக்களில் ஒருவன் நான். ஆனால் கோட்டூர்புரம் அண்ணா நூலக விஷயத்தில் உங்கள் நிலைப்பாடு நலிந்த மக்களுக்கு எதிரானதாக இருப்பதாக நினைக்கிறோம். இதற்கு அரசியல் உள் நோக்கம் எதுவும் உங்களுக்கு இருக்காது என உறுதியாக நம்புகிறோம்.

ஆனால் சில தவல்கள் உங்கள் கவனத்துக்கு வரவில்லை என நினைக்கிறோம். கீழ்கண்ட விஷ்யங்கள் உங்கள் கவனத்துக்கு வந்தனவா?

 • மின் வெட்டால் மக்களும் , நிறுவனங்களும் துன்புறும் நிலையில் , அண்ணா நூலகத்தில் கழிப்பிடம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் , ஆட்களே வராத நேரங்களிலும் , தினமும் ஏர் கண்டிஷன் செயல்பட்டு வருவது உங்கள் கவனத்துக்கு வந்ததா?
 • புத்தகம் வாங்குவதை விடுங்கள். பராமரிப்பு, பாதுகாப்புக்கு மட்டும் ஆண்டொன்றுக்கு 30 கோடி ரூபாய் ( மாதம் ஒன்றுக்கு 2.5 கோடி !! ) செலவாகும் என்பது உங்கள் கவனத்துக்கு வந்ததா?
 • இது போன்ற ஆடம்பர கட்டடங்கள் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக இருந்தால் இத்தகைய செலவுகளை தம் வருமானங்கள் மூலம் சமாளிப்பார்கள். இந்த நூலகம் இந்த செலவுகளை , இந்த நூலகத்தை பயன்படுத்த வாய்ப்பே இல்லாத நலிந்த மக்களின் நிதியை கொண்டு சமாளிப்பது உங்கள் கவனத்துக்கு வந்ததா
 • இலவச டீவி போன்ற திட்டங்களால் பாமர மக்கள் மயங்கி விட்டார்கள் என அறிவு ஜீவிகள் குற்றம் சாட்டினார்கள். ஆனால் தற்போது நூலகம் குளு குளுவென இருக்கிறது , கட்டடம் பிரமாண்டமாக இருக்கிறது என அறிவு ஜீவுகள் மயக்கத்தில் இருப்பதாக பாமர மக்கள் நினைப்பது உங்கள் கவனத்துக்கு வந்ததா?
 •  அண்ணா நூலகம் சென்று பார்த்தீர்களா? அதில் புத்தகம் இருக்கும் அறைகளை விட வெற்றிடங்கள்தான் அதிகம். கன்னிமரா நூலக பாணியில் கட்டினால் இரண்டே தளத்தில் இந்த நூலகத்தை அமைத்து செலவை கட்டுப்படுத்தலாம் என தொழில் நுட்ப வல்லுனர்கள் கருதுவது உங்கள் கவனத்துக்கு வந்ததா?
 • இந்த செலவுகளை கட்டுப்படுத்தி , மற்ற நூலகங்களில் இருந்து எடுத்த பணத்தை திருப்பி கொடுத்தால் , நலிந்த மக்கள் பெரும் பயன் பெற முடியும் என்பது உங்கள் கவனத்துக்கு வந்ததா?

 இவை எல்லாம் எனக்கு தெரியும் . ஆனாலும் அனைவருக்கும் பயனுள்ள டி பி அய்க்கு , சிறப்பான சிக்கனமான இடத்திற்கு மாற்றுவதை எதிர்க்கிறேன் என்று நீங்கள் சொன்னாலும் உங்கள் மீதான எங்கள் மரியாதை மாறப்போவதில்லை.. ஆனாலும் உண்மை தெரிந்து , உங்கள் நிலையை மாற்றிகொண்டு , வழக்கம்போல உங்களுக்கே உரித்தான மக்கள் நல சார்பு நிலையை எடுத்தால் என்றென்றும் நலிந்த மக்கள் உங்களை வணங்குவார்கள்

என்றென்றும் அன்புடன்,

பிச்சைக்காரன்

Advertisements
This entry was posted in அரசியல் and tagged . Bookmark the permalink.

5 Responses to ஞானி அவர்களுக்கு ஆறு கேள்விகள்- அண்ணா நூலக விவகாரம்

 1. Robin says:

  //இந்த நூலகம் இந்த செலவுகளை , இந்த நூலகத்தை பயன்படுத்த வாய்ப்பே இல்லாத நலிந்த மக்களின் நிதியை கொண்டு சமாளிப்பது உங்கள் கவனத்துக்கு வந்ததா// இது நலிந்த மக்களின் நிதியில்ல. நலிந்த மக்கள் எத்தனை ரூபாய் வரி கட்டுவார்கள்? நூலகமும் பொதுமக்களுக்கு தேவையான ஒன்றுதான்.

 2. Robin says:

  சென்னையில் மட்டுமல்லாது எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் பெரிய நூலகங்கள் கட்டப்படவேண்டும். சும்மா எதற்கெடுத்தாலும் குறை சொல்வதால் எந்த பயனுமில்லை.

  நலிந்த மக்களுக்கு ஏற்கனவே பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசாங்கம் என்பது நலிந்த மக்களுக்கு மட்டுமானதல்ல எல்லாருக்கும் உரியது.

 3. suupaa says:

  டே பிச்சகாரப்பயலே
  சாரு நிவேதிதா-வ பாத்தமா, சரக்கடிச்சிட்டு குப்புறப் படுத்தமானு இருடா…
  புச்தகதுக்கும் ஒங்களுக்கும் என்னடா சம்பந்தம்…

 4. டமில்டுமில் says:

  என்னோட கமெண்ட் வராதுன்னு தெரியும். ஆன தெரிஞ்ச்கோங்க, படிக்குறங்க எல்லாம் மாங்கா இல்லைன்னு

 5. suresh says:

  antha ammakooda ippadi ninachirukka matanga

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s