ஞானிகள் நாய்களை விரும்புவது ஏன்? – சாரு நிவேதிதா

ஞாயிறு விடுமுறையை தொலைக்காட்சியில் செலவிட நான் என்றும் விரும்பியதில்லை . எனவே தொலைக்காட்சிக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்காது.. ஆயினும் சாரு நிகழ்ச்சிக்காக ஆவலாக காத்து இருந்தேன்… அவர் பேச இருப்பது தத்துவமோ, இலக்கியமோ அல்ல… வளர்ப்பு மிருகங்கள் பற்றிய நிகழ்ச்சி… ஆனால் அதிலும் தன் முத்திரையை பதிப்பார் என்பது எனக்கு தெரியும்.. எனவே சரியான நேரத்தில், தொ.கா முன் அமர்ந்தேன்.. இயல்பாக பேச ஆரம்பித்தார் சாரு… அவர் ஒரு புறம் பேச , அவரது செல்லங்களான பப்புவும் , சோராவும் ( நாய்கள் என்று சொன்னால் அவற்றுக்கு பிடிக்காதாம் ) உடல் மொழியால் பேசிக்கொண்டிருந்தன… மனிதர்களுக்குள் நிலவும் அன்புக்கும், நாய்கள் மேல் நாம் வைக்கும் அன்புக்கும் என்ன வித்தியாசம்? நாய் எப்படி மனிதனை விட உயர்ந்த நிலையில் இருக்கிறது? போன்ற விஷயங்களை சுவையாகவும் , தத்துவ நோக்கிலும், அன்புடனும் எடுத்துரைத்தார்.. அவர் பேசியதில் இருந்து…. ******************************************* ஒரு காலத்தில் எனக்கும் நாய்களுக்கும் சம்பந்தம் இருந்தது இல்லை… சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மழை நாளில் ஒரு நாயை பார்த்தேன்.. அதை எடுக்க வளர்க்க ஆரம்பித்தேன்.. காலப்போக்கில் அதன் மீது என்னுடனான நெருக்கம் அதிகரித்தது. அதன் பெயரும் பப்புதான்… நாயின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள்தான்… எனவே சில ஆண்டுகளில் அது இறந்து விட்டது. மிகவும் மன வேதனை அடைந்தேன்.. அப்போதுதான் டாக்டர் அருண் எனக்கு பப்புவை அறிமுகப்படுத்தினார்..இது வெளினாட்டு இனத்தை சேர்ந்தது… தனி கவனத்துடன் வளர்க்க வேண்டும்.. கடும் வெயில் இதற்கு ஒத்து வராது. பப்பு ஒரு சாப்பாட்டு பிரியன்.. என் மேல் பப்புவுக்கும் , சோராவுக்கும் பயங்கர பொசசிவ்னெஸ் உண்டு .. நான் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வரும்போது , என்னை யார் முதலில் கொஞ்சுவது என்பதில் அவற்றுக்கு இடையே நடக்கும் சண்டை சுவையாக இருக்கும். வெளியே சென்று இருக்கும் போது, ஏதாவது ஆட்டோ சத்தம் கேட்டால் , நான் தான் வந்து விட்டதாக நினைத்து , அவை குலைக்க ஆரம்பித்து விடும். இந்த அளவுக்கு அன்பு இருப்பதால்தான், மகாபாராததில் தர்மர் தன் நாயையும் தன்னுடன் சொர்க்கம் அழைத்து சென்றார் என கூறப்பட்டுள்ளது… செயிண்ட் பெர்னார்ட் என்று ஒரு நாய் வகை இருக்கிறது . பப்ப்வும் ஒரு செயிண்ட்தான்.. அதற்கு கோபமே வராது.. மனிதனின் அன்புக்கும் நாயின் அன்புக்கும் வேறுபாடு இருக்கிறது.. நாயின் அன்பு அன்கண்டிஷனல்… ஒரு மனிதனுக்கு தேவை என்றால்தான் அன்பு காட்டுவான்…ஆனால் அன்பாக இருப்பது நாயின் இயல்பு தன்மை… நிபந்த்னை இல்லாத அன்பு… நான் தியானம் செய்ய அமரும்போது , அது என் மடியில் வந்து அமர்ந்து கொள்ளும் ( தியான நிலையில் அவர் அமர, அவர் மடியில் அது அமர்ந்து கொண்டது ) சோரோவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அது சாப்பாட்டு பிரியன் அல்ல.. ராயல் ஃபுட் மட்டும்தான் சாப்பிடும்… மற்றவை சாப்பிட்டால் வாந்தியாகி விடும்.. ஒரு முறை அதற்கு பெட் விரித்து வைக்க மறந்து தூங்கி விட்டேன். நள்ளிரவு தற்செயலாக விழித்து பார்த்தால் , என் அருகிலேயே தூங்காமல் அமர்ந்து கொண்டு இருந்தது.. பதறி போய் எழுந்து அதன் பெட்டில் தூங்க வைத்தேன். எழுத்தாளனும் துறவியும் ஒன்று.. இருவரும் தனிமையில் வாழ்பவர்கள்… அவர்களுக்கு நெருக்கமாக இருப்பவை நாய்கள்தான்.. நான் பேச்சுக்காக நாய்கள் என சொல்கிறேனே தவிர பொதுவாக இவற்றை நாய்கள் என சொல்வதில்லை.. சொன்னால் இவற்றுக்கு பிடிக்காது… என் மகன் , மனைவி உள்ளிட்ட யாரிடம் செலுத்தாத அன்பை இவ்ற்றின் மீது செலுத்துகிறேன். இவற்றின் காலத்துக்கு பின் எவற்றின் ஆன்மா எங்கே போகும் .இவற்றுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? ஏன் என் மேல் இவ்வளவு அன்பு காட்டுகின்றன?

Advertisements
This entry was posted in Uncategorized and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s