சாரு- வாழும் வரலாறு

நேர்மை..துணிவு.. உண்மை ..தெளிவு.. மனித நேயம் என்பதை படித்து இருக்கிறோம். படிக்கும்போது இதெல்லாம் நல்ல் குணங்கள் என்று நினைத்துக்கொள்வோம்.. ஆனால் இவற்றை நேரில் பார்க்கும் வாய்ப்பு பெரும்பாலும் இருக்காது.. நேரில் பார்த்தால் அது தரும் உணர்வு வார்த்தையில் வடிக்க இயலாது… அப்படி ஓர் உணர்வு சமீபத்தில் கிடைத்தது… தமிழ் நாட்டை பொறுத்தவரை அறிவு ஜீவிகள் என பெயர் வாங்க சில எளிய ஃபார்முலாக்கள் இருக்கின்றன.. பார்க்கும் எல்லோரையும் வசை பாட வேண்டும் கடவுள் இல்லை என நம்புகிறேன் என சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் பிறர் மனதை புண் படுத்துபவர்களை ஹீரோ வொர்ஷிப் செய்ய வேண்டும் இந்த ஃபார்முலாக்கள் பதிவர்கள் உட்பட அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்… சாரு நிவேதிதாவை கவனித்து வருபவர்களுக்கு தெரியும்… அவர் கடவுளை நம்புகிறார் அல்லது இல்லை என நம்புகிறார் என சொல்லவே முடியாது… கடவுள் குறித்த தன் அனுபவத்தை மட்டுமே அவ்வப்போது பகிர்ந்து வந்தி இருக்கிறார்.. கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்ப்தை முன் முடிவு வேண்டாம்… திறந்த மனதுடன் தேடி விடையை காண் என்பதே இவர் அணுகு முறை… சமீபத்திய கட்டுரை ஒன்றில் அவர் எழுதி இருக்கிறார்.. “ 14 வயதில் ஒரு சிறுவனால் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வர முடிகிறது… கடவுள் இருந்தாலும் இருக்கலாம் என்ற இன்னொரு பக்கத்தை காட்ட இந்த கல்வி தவறி விட்டது . நானும் இந்த கேள்வியை கேட்டு இருக்கிறேன்.. மனிதர்களிடம் அல்ல.. கடவுளிடம்.. “ இருக்கிறாயா இல்லையா..இருந்தால் காட்சி கொடு “ என ஜம்மு வஷ்ணவோ தேவியில் இருந்து ஃபிரான்ஸ் லூர்து மாதா கோவில் வரை போய் கேட்டேன்.. கடவுள் நம்பிக்கையை என்னுள் விதைத்தவர் பிஸ்மில்லா கான் என சொல்ல வேண்டும் “: என்று தொடர்கிறது கட்டுரை… இதை பார்த்தாலே தெரியும்.. சாருவுக்கு என எந்த மதமும் கிடையாது…. ஆனால் கடவுள் இருந்தாலும் இருக்கலாம் என கூற ஒரு தைரியம் வேண்டும்… இப்படி சொல்வதால் இழப்புகள் ஏற்படும்… அறிவு ஜீவிகள் எதிர்ப்பார்கள் என தெரிந்தும் இப்படி கூறுகிறார் சாரு… அடுத்து வசை பாடுதல்… தமிழ் நாட்டில் அறிவு ஜீவி என பெயர் எடுக்க ஷார்ட் கட், அனைவரையும் வசை பாடுதல்தான்… ஆனால் தவறு செய்பவர்களை திட்டும் சாரு, தனக்கு நல்லவர்கள் என தோன்றினால் அவர்களை பாராட்டவும் தயங்கியதில்லை… இதில், இலக்கிய உலகில் அ தி மு க இல்லாத நிலையில், அந்த கட்சியை பாராட்டுவது ஹை ரிஸ்க்… அப்படி இருந்தும் , ஜெயலலிதாவை பாராட்டினார் சாரு… அடுத்ததுதான் முக்கியம்… ஓவியர் ஹூசைன்.. பலருக்கு அவர் சர்ச்சைகள் மூலம்தான் அறிமுகம் ஆனார்… அவரை ஆதரிப்ப்துதான் அறிவு ஜீவுகளின் அடையாளம் ஆகி விட்டது.. இந்த நிலையில் தனி நபராக எதிர் கருத்து கூறினார் சாரு.. இதையெல்லாம் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது… யார் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் கவலைப்படாமல் தன் கருதை கூற வேண்டும் என்றால் எந்த அளவுக்கு தார்மீக தைரியம் வேண்டும்… அது சாருவிடம் இருக்கிறது… ஆனால் இதை எல்லாம் மீறி அவரிடம் இருக்கும் மனித நேயம் , இதுவரை தமிழ் நாடு பார்த்து இராத ஒன்று… சாருவின் நூல் ஒன்று புதிதாக வந்த புதிதில், அந்த பிரதிகள் சிலவற்றை மொத்தமாக வாங்கி , சலுகை விலையில் , வலைப்பூ நண்பர்களுக்கு கொடுக்க விரும்பினேன்… ஆனால் அந்த பதிப்பகத்தினர் போதிய ஆதரவு தராததால் அந்த முயற்சியை கை விட்டேன்.. ஆனால் இதை யாரிடம் சொல்லி என்ன ஆக போகிறது என்று யாரிடமும் சொல்லவில்லை.. ஆனால் சில வாசகர்கள், சாருவிடம் தாங்கள் பாதிக்கப்பட்டபோது முறையிட்டார்கள்.. எந்த ஓர் எழுத்தாளராக இருந்தாலும், இதில் தலையிடாமல் இருக்கவே விரும்புவார்கள்.. பதிப்பகத்தை பகைத்து கொள்ள விரும்ப மாட்டார்கள்.. ஆனால் தன் வாசகர்கள் உணர்ச்சிக்கு மதிப்பளித்து , பதிப்பகத்தை பகைத்து கொண்ட ஒரே எழுத்தாள்ர் சாருதான்.. அந்த அளவுக்கு , தன் வாசகர்கள் மேல் அவர் அன்பு வைத்து இருக்கிறார் என தெரிந்து நெகிழ்ந்து போனேன்… இப்படி ஒருவர் இருந்தாரா என எதிர்காலம் ஆச்சர்யப்படும் அளவுக்கு வாழும் ஒருவர் வாழும் காலத்தில் நானும் வாழ்வதில் பெருமைப்படுகிறேன்…

Advertisements
This entry was posted in பதிவுலகம் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s