அவர் என்னிடம் ஆபாசமாக பேசினார்- உரையாடல் தொகுப்பு

இது ஒரு கற்பனை உரையாடல்…  

” பெண்கள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர துவங்கி இருக்கிறார்கள். அவர்கள் திறமைகள் வெளிவர ஆரம்பித்து இருக்கின்றன. இந்த நிலையில் இப்படி சில நிக்ழ்ச்சிகள் நடப்பது அவர்களை மீண்டும் கூண்டுக்குள் அடைத்து விடுமோ என அஞ்சுகிறேன் “

“ ஏன் சகோதரி ? என்ன நடந்தது ? “

“  ஓர் இளம்பெண்ணாகிய என்னிடம்  எழுத்தாளர் ஒருவர் தவறாக நடந்து கொண்டு என்னை  மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டார் . ஆபாசமாக பேசி தர குறைவாக நடந்து கொண்டு விட்டார் “

“  என்ன சொல்றீங்க ? இது உண்மை என்றால் பெரிய குற்றமாயிற்றே. பெண் என்று அல்ல.. ஆணாக இருந்தாலும் கூட அவருக்கு விருப்பம் இல்லாத வகையில் அவருடன் பேசுவது குற்றம். 


முன் பின் தெரியாத பெண் மேல் பேருந்தில் அத்து மீறுவது, தன்னுடன் இணக்கமாக நடந்து கொண்டால்தான் வேலை/ மதிப்பெண் என்றெல்லாம் மிரட்டுவது என பல வகைகளில் குற்றங்கள் நடக்கின்றன. இதை எல்லாம் தடுப்பது நம் கடமை … சொல்லுங்க… என்ன நடந்தது..  ? “

“ எழுத்தாளர் என்ற முறையில் அவருடன் பேச ஆரம்பித்தேன் “

“ ஓஹோ… அவர் புத்தகங்கள் எல்லாம் படித்து இருக்கிறீர்களா? “

“  படித்தது இல்லை.. இருந்தாலும் சும்மா பேச ஆரம்பித்தேன் ..

” அதாவது அவர் எழுத்தால் கவரப்பட்டு அவருடன் பேசவில்லை.. சரி சொல்லுங்கள் 

ஆரம்பத்தில் நார்மலாக பேசிய அவர் கொஞ்சம் கொஞ்சமாக உரிமை எடுத்து கொண்டு பேச ஆரபித்தார் .. அவர் என் அப்பா வயது உடையவர்… ஆனாலும் உரிமை எடுத்து கொண்டு அவர் பெயர் சொல்லி அழைத்து பேச ஆரம்பித்தேன்… என்ன ஓர் அதிர்ச்சி!!!.. அவரும் உரிமை எடுத்து கொண்டு பேச ஆரம்பித்து விட்டார் “

“ இதை சரி , தவறு என நான் சொல்ல முடியாது..  நீங்கள்தான் முடிவு எடுத்து இருக்க வேண்டும்..  அவர் பேசியது பிடித்து இருந்தால், தொடர்ந்து இருக்க வேண்டும்.. இல்லை என்றால் அவரை இக்னோர் செய்து இருக்க வேண்டும்.. நீங்கள் என்ன செய்தீர்கள் ? “

“ அவர் நல்லவர் என நம்பி புகைப்படம் அனுப்பினேன்… நான் அழகாக இருப்பதாக அவர் சொல்லி விட்டார்..எனக்கு வருத்தமாக இருந்தது ? “

“ அட கடவுளே… உங்களை திருட்டு தனமாக புகைப்படம் எடுத்து இருந்தால் பெரிய குற்றமாயிற்றே… அதை கமெண்ட் வேறு அடித்தால் பெரிய தவறுதான்.. ஆனால் நீங்களே படம் அனுப்பினேன் என்கிறீர்கள் .. சரி,.. அப்புறம் .. ‘’

“ அவர் கொஞ்சம் கொஞ்சமாக எல்லை மீறி சாட் செய்ய  ஆரம்பித்தார்..  அவர் எவ்வளவு தூரம் போவார் என பார்ப்பதற்காக  நானும் சாட் செய்தேன் “

“ இப்போது புரிகிறது… அவர் தன்னை புனிதமான மனிதர் என சொல்லி கொள்பவர்.. அதை தவறு என நிரூபிப்பதற்காக இப்படி பேசுவது போல நடித்தீர்கள்.. ரைட் ? “

“ இல்லை…அவர் தன்னை புனிதமானவர் என சொல்லி கொள்பவர் இல்லை “

“பிறகு ஏன் அவருடன் இப்படி பேசினீர்கள் ? “

யாராவது அவருடன் கிளுகிளுப்பாக பேசினால், அவரும் கிளுகிளுப்பாக பேசுவார் என உலகுக்கு நிரூபிக்கும் கடமை நமக்கு இருக்கிறது என ஒருவர் போதனை செய்தார்.. எனவேதான் இந்த ஆப்பரேஷனை திட்டமிட்டோம்

 இது ஒரு கடமை. இதற்கு ஓர் ஆப்பரேஷனா? என்னிடம் கேட்டு இருந்தால் நானே சொல்லித் தொலைத்து இருப்பேனே…  

சற்று ஓவராக போகிறோம் என எனக்கே தோன்றி விட்டது ..

“ சரி..அத்துடன் நிறுத்துவதுதானே..இதில்  என்ன பிரச்சினை ? ..“:

“ பொது இடங்களில் தவறாக  னடந்து கொள்ளும் ஆணை உடனடியாக எதிர்க்க முடியாது… சற்று தாமதமாகத்தான் பதிலடி கொடுக்க முடியும்… அதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம் சாட்டுவதா? “

“ இந்த உதாரணத்தில் அந்த ஆண் செய்தது அயோக்கியத்தனம்… ஆனால் தன் இல்லத்தில் தன் விருப்படி இருக்கும் ஆணுடன் வலுக்கட்டாயமாக பேசி விட்டு, அவன் திரும்ப பேசினால் , தவறு என்பது வேறு விஷ்யம்… ”

“ அப்ப நான் என்னதான் செய்வது? “

 உண்மையிலேயே பாவப்பட்ட பெண்கள் பலர் இருக்கிறார்கள்.. அவர்களுக்காக போராட வேண்டிய நிலையில், இது போன்ற விளம்பர குற்றச்சாட்டுக்கள், உண்மையான போராட்டத்தை வலுவிழக்க செய்து விடும்… 
நீங்கள் எல்லாம் ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போதும்.. பெண்கள் நிலை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறும்…


இது போன்ற போக்குகளை பார்த்தால் , உரையாடலின் ஆரம்ப வரிகள் உண்மையாகி விடுமோ என பயமாக இருக்கிறது ‘ 

”  நான் உங்கள் சகோதரியாக இருந்தாலும் இப்படித்தான் பேசுவீர்களா? “

“ உங்களை சகோதரி என எண்ணுவதால்தான் உங்கள் மீது கொண்ட அன்பால் இப்படி பேசுகிறேன்… ஆனால் உங்களை அன்னியர் என நினைக்கும் சிலர் உங்களை தூண்டி விட்டு தம்மை பெண்ணின காவலர் என நிரூபிக்க முயலக்கூடும்…அவர்களுக்கு விளம்பரம்.உங்களுக்கு மன உளைச்சல் ”


“    நான் யாரைத்தான் நம்புவது ? “


” தாம் பெண் என்பதற்காக அல்ல… தமது எழுத்துக்களுக்காக, கற்பனைத்திறனுக்காக, நகைச்சுவை உணர்ச்சிக்காக, சமூக அக்கறைக்காக ரசிக்கப்படும் பெண் பதிவர்கள் பலர் இருக்கிறார்கள்.. அவர்களிடம் விவாதியுங்கள்…  ஆண், பெண் என்பதை மறந்து , பொது வெளியில் இயங்குவது குறித்து  அவர்கள் சொல்லி தருவார்கள்… 


இதே எழுத்தாளருடன் இலக்கிய விவாதம் செய்யும் அளவுக்கு படிக்க , தன்னம்பிக்கை பெற அவர்கள் உதவுவார்கள்… 


ஊரில் இருக்கும் பகுத்தறிவுவாதிகள், இடதுசாரிகள் என பலரையும்  இந்த காமெடியில் இறக்கி விட்ட நீங்கள் இதை உங்கள் வெற்றியாக நினைத்தால் நான் சொல்வது உங்களுக்கு தேவை அற்றது.. அல்லது உண்மையில் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தால், ஒரு சகோதரனாக என் வேண்டுகோளை மதித்து , பதிவுலகில் இருக்கும் என் அன்னைமார்களை , சகோதரிகளை , தோழிகளை தொடர்பு கொண்டு விவாதியுங்கள்… 

Advertisements
This entry was posted in பதிவுலகம் and tagged . Bookmark the permalink.

2 Responses to அவர் என்னிடம் ஆபாசமாக பேசினார்- உரையாடல் தொகுப்பு

  1. Manivannan says:

    🙂 ha ha ha 🙂 kalakkal!

  2. ANONYMOUS says:

    யாராவது அவருடன் கிளுகிளுப்பாக பேசினால், அவரும் கிளுகிளுப்பாக பேசுவார் என உலகுக்கு நிரூபிக்கும் கடமை நமக்கு இருக்கிறது என ஒருவர் போதனை செய்தார்.. எனவேதான் இந்த ஆப்பரேஷனை திட்டமிட்டோம்//
    ?
    ??

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s