கலைஞர் டீவியை நடத்துவது பேய் பிசாசா? சாரு நிவேதிதா கலக்கல் காமெடி

அல்ட்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதாவின் எழுத்துக்களுக்கு சில பொது தன்மைகள் உண்டு.. சமரசமற்ற பார்வை, புதிய விஷயங்கள் அறிமுகம் , சரளமான நடை , மொழி ஆளுமை போன்றவை அவரது எல்லா எழுத்துக்களிலும் இருக்கும் . இதைத்தவிர , சொல்லும் விஷ்யத்தை பொறுத்து கடுமை, ஆக்ரோஷம் , காதல் போன்றவை இருக்கும்.

இன்று காலை நான் படித்த அவ்ரது கட்டுரையில் , செமத்தியான நகைச்சுவை விருந்து படைத்து இருந்தார் .. பொது இடத்திலேயே சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தேன்…

அதைத்தவிர ச்மூக அக்கறை , சக எழுத்தாளர்களை பற்றி குறிப்பிடுதல் போன்றவையும் அருமையாக இருந்தது..

இது இண்டர்னெட்டில் வந்தது அல்ல . துக்ளக் இதழில் வந்தது .

அந்த கட்டுரையில் சில பகுதிகள் , உங்கள் பார்வைக்கு…

ஆணாதிக்கத்தைப்பற்றி கனி மொழி ஆக்ரோஷமாக எழுதி இருக்கிறார். இப்போது “ நான் ஒரு பெண் “ என சொல்லி ஜாமீன் கேட்கிறார்.
தந்தையின் பகுத்தறிவு ஆர்ய மாயையை திட்டிக்கொண்டே மஞ்சள் துண்டு அணிந்து கொள்ளும். அதேபோல மகள் கனிமொழிக்கு அகப்பட்டது பெண் ஈயம் – ஸாரி பெண்ணியம்
கை எழுத்து போட்டதை தவிர நான் வேறு எதுவும் செய்யவில்லை என்கிறார் கனிமொழி. சரத்குமாரோ த்னக்கும் எதுவும் தெரியாது என்கிறார். தயாளு அம்மாளுக்கோ ஆங்கிலம் தெரியாது. இந்த மூன்று பேரும்தான் கலைஞர் டீவியின் பங்குதாரர்கள். இவர்கள் மூவருக்குமே எதுவும் தெரியாது என்றால் கலைஞர் டீவியை ஏதாவது பேய் பிசாசு நடத்துகிறதா? பகுத்தறிவின்படி பார்த்தால் கடவுள் இல்லை என்றால் பேய் பிசாசும் இல்லை என்று ஆகிறதே ? அப்ப்டியென்றால் கலைஞர் டீவியை யார்தான் நடத்துகிறார்கள்?
என் நண்பர் ஒருவர் பஸ்ஸுக்காக காத்து இருந்தபோது எதிர் திசையில் வந்த நைக் மோதி காலில் எலும்பு முறிவு. பைக்கிள் மூன்று பேர். மூவரும் போதை. “ ழாழி பிரதழ் “ என்றாராம் வண்டியை ஓட்டி வந்தவர் ( ஸாரி பிரதர் என்று மொழி பெயர்த்துக்கொள்ளவும் )

இந்த கட்டுரையில் ஜெயமோகன் , மனுஷ் பற்றியெல்லாம் குறிப்பிட்டு இருக்கிறார். சாரு புண்ணியத்தில் , அரசியல் பத்திரிக்கையில் இலக்கியவாதிகள் பெயரெல்லாம் இடம் பெறுவது மகிழ்ச்சி.

Advertisements
This entry was posted in புத்தகம். Bookmark the permalink.

One Response to கலைஞர் டீவியை நடத்துவது பேய் பிசாசா? சாரு நிவேதிதா கலக்கல் காமெடி

  1. Krishnamoorthy says:

    தான் போட்ட கையெழுத்தையே தன்னுடையதில்லை என்று சொன்னதைப் பற்றி உச்ச நீதிமன்றம் ஒன்றுமே சொல்லாததைப் பார்த்தாவது, கலைஞர் டிவியில் நான் இயக்குனராக இருக்கும் கையெழுத்து என்னுடையதில்லை என்று சொல்லி உச்ச நீதி மன்றத்தில் ஜாமீன் வாங்குவார்களா கனி மொழி. அதுதான் ஜோதி அவருடைய கட்சிதானே, ஆலோசனை கேட்டால் தப்பிப்பார்.

    அம்மாவின் அந்த அந்தர் பல்டி பற்றி ஏதாவது தெரியுமா சாருவுக்கு? அம்மாவை நேர்மையின் திரு உரு என்று எழுதிக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s