மரணத்தை கற்று கொள்ளுதல்

புத்தகங்களில் பல வகை உண்டு என்பதை போல , ஒரு புத்தகத்துக்கும் நமக்கும் இருக்கும் தொடர்பிலும் பல வகை உண்டு. ஒரு புத்தகம் எப்படி அறிமுகமாகிறது, படித்து முடித்த பின் என்ன தோன்றியது என்பதை வைத்து ஒரு புத்தகமே எழுதலாம்.. தேடிப்படிக்கும் புத்தகங்கள் ஒரு வகை.. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகம் தேடி படித்தது அல்ல… ஒரு நண்பர் சிபாரிசு செய்ததால் வாங்கினேன்.. அப்படியே வைத்து விட்டேன், படிக்காமலேயே… படிக்க வேண்டும் என நினைத்ததும் இல்லை… தற்செயலாக ஒரு நாள் எடுத்தேன்.. புரட்ட ஆரம்பித்தேன் .. அடடா… என்ன ஓர் அற்புதமாக புத்தகம் என தோன்றியது… எதிர்பாராமல் கிடைத்த விருந்து போல் தோன்றிய அந்த புத்தகம்தான், Tuesdays with Morrie … ஒரு மாணவனுக்கு பிரத்தியேகமாக ஒரு பேராசிரியர் எடுக்கும் வகுப்புதான் இந்த புத்தகம்… எதைப்பற்றிய வகுப்பு? வாழ்வை பற்றிய , சாவை பற்றிய வகுப்பு.. இந்த வகுப்பில் புத்தகம் எதுவும் இல்லை,, அனுபவத்தை அடிப்படையாக கொண்ட பாடம்தான் இங்கு கற்பிக்க படுகிறது… தன் மீது பேரன்பு கொண்ட பேராசிரியருடன்,(morrie) நீண்ட நாள் தொடர்பில் இல்லாத ஒரு மாணவன்,( புத்தக ஆசிரியர் ) அவர் விரைவில் இறக்கப்போகிறார் என அறிந்து அவரை சந்திக்கிறான்… எப்படி இந்த செய்தியை அறிந்தான்? எந்த பேராசிரியர் கொடிய நோய் ஒன்றால் தாக்கப்பட்டு விரைவில் மரணமடைய போகிறார் என்பது அவருக்கு தெரிய வருகிறது… தனக்கு மரணம் வரப்போகிறதே என அஞ்சி , வருந்தி இறந்து போகலாம்.. அல்லது மிச்சம் இருக்கும் நாளை அர்த்தம் உள்ளதாக மாற்றலாம்.. இந்த இரு வாய்ப்புகள் அவர் முன் உள்ளன.. இரண்டாவதை தேர்ந்தெடுக்கிறார் இவர்.. இது வரை அவர் சொல்லி கொடுத்த பாடங்களை போல மரணம் என்பதைப்பற்றியும் சொல்லிக்கொடுக்க விரும்புகிறார் இவர்… தன்னையே ஒரு புத்தகாமாக நினைத்து யார் வேண்டுமானாலும் படித்து கொள்ளலாம் என அறிவிக்கிறார்.. நான் விரைவில் இறக்க இருப்பவன்.. இன்னும் உயிரிடன் இருப்பவன்.. எனவே இறப்புக்கும், வாழ்வுக்கும் பாலமாக இருக்கும் என்னை பயன்படுத்தி மரணம் என்றால் என்ன? மரணம் அடையும் போது என்ன உணர்வுகள் இருக்கும்? வாழ்க்கையை பற்றி மரணம் அடைய இருப்பவன் என்ன நினைப்பான்? என்பது போன்ற விஷ்யங்களை அறிந்து கொள்ள்ளுங்கள் என அறிவிக்கிறார்… இவரை பற்றி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது… அதை பார்த்துதான், அந்த மாணவன் அவரை பார்க்க வருகிறான்.. ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் அவரை பார்த்து , பல விஷ்யங்களை பற்றி அவர் கருத்துக்களை கேட்கிறான்… மரணம் அடையும் கடைசி நாள் வரை அவர் நடத்தும் சிறப்பு பாடம்தான் இந்த புத்தகம்… தத்துவம் , ஆன்மீகம் , மனவியல், காதல் , திருமணம் என பல விஷ்யங்களில் ஒரு தெளிவான பார்வையை அளிக்கிறது புத்தகம்.. எளிய , இனிமையான நடை ..ஆங்காங்கு நகைச்சுவை என கடினமான விஷ்யங்களை எளிமையாக சொல்லி செல்கிறது புத்தகம்…

நான் ரசித்த சில வரிகள்

  • வாழ்க்கை என்பது எதிர் எதிர் துருவங்களால் ஆனது… ஒன்றை செய்ய நினப்போம். ஆனால் இன்னொன்றை செய்வோம். சிலவற்றை அலட்சியாமாக நினைப்போம். அது தவறு என்றும் உணர்வோம். சில நம்மை புண்படுத்தும்…அப்படி புண்பட தேவையில்லை என்பதும் நமக்கு தெரியும்.. இருபுறமும் இழுக்கப்பட்ட ரப்பர் பேண்டின் நடுவில் வாழ்வது போலத்தான் நம் வாழ்க்கை இருக்கிறது..வாழ்க்கை ஒரு ஒரு மல்யுத்த போட்டி போல தோன்றுகிறதுஅவர் சிரித்தார் “ அப்படியும் சொல்லலாம் “

“ கடைசியில் யார் வெல்வார்கள்” கேட்டேன் நான்… “ யார் வெல்வார்கள்? “ என்னை பார்த்து குறும்பாக சிரித்தார்.. “ அன்பு வெல்லும்.. அன்புதான் என்றும் வெல்லும் “

  • அப்போது ஓ ஜே சிம்ப்சன் வழக்கு நடந்து வந்தது.. பலரும் ஆர்வத்துடன் வழக்கை கவனித்து வந்தனர்.. அதை பற்றியே எங்கும் பேசி வந்த்னர்…அவர்களுக்கு ஓஜே சிம்பசனுடன் பழக்கம் இல்லை.. அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுடனும் எந்த தொடர்பும் இல்லை… யாரோ ஒருவரின் வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள தம் நாட்களை பலர் வீணடித்து கொண்டு இருந்தனர்..
  • எப்படி இறப்பது என கற்று கொண்டால், எப்படி வாழ்வது என்பதை கற்றுக்கொள்ளலாம்..
  • கோபம் , காமம் , ஏமாற்ரம் போன்ற உணர்வுகளை முழுதாக அனுபவியுங்கள்.. ஆனால் அதிலேயே சிக்கி கொள்ளாதீர்கள்… முழுதாக அனுபவித்து விட்ட நிலையில் , அந்த உணர்வை பற்றிய முழு அறிவும் உங்களிடம் இருக்கும்… உதாரணமாக, துக்கம் ஏற்பட்டால், இதுதான் துக்கமா? இதுதான் எனக்கு முன்பே தெரியுமே… அடுத்து என்ன என யோசிக்க வேண்டும்… துக்கம் என்பதிலேயே சிக்குண்டு போக கூடாது ...
  • இளைஞனான என்னை பார்த்து முதியவரான உங்களுக்கு பொறாமை இல்லையா? என்னிடம் இல்லாத ஒன்று உன்னிடம் இருந்தால் பொறாமை படலாம்.. நீ இப்போது இருக்கும் நிலையில் நானும் இருந்து இருக்கிறேனே.. நான் இளைஞனாக இருக்கும் நேரம் ஒன்று இருந்தது… அதை அனுபவித்தேன்..இப்போது நீ இளைஞனாக இருக்கும் நேரம்.. இதில் பொறாமைப்பட என்ன இருக்கிறது?
  • நமக்கு என்ன தேவை என்பதற்கும் நாம் என்ன விரும்புகிறோம் என்பதற்கும் இடையே பெரிய குழப்பம் நிலவுகிறது.. நமக்கு தேவை உணவு,தண்ணீர்.. நாம் விரும்புவது பீட்சா, கோலா , பீர் ..

சொல்லிகொண்டே போகலாம்… மரணத்தை பற்றி பல்வேறு இனங்களின் நம்பிக்கைகளை ஆங்காங்கு சொல்லி இருப்பது, பல்வேறு பிளாஷ் பேக்குகள், சுவையான நிகழ்ச்சிகள், மகாத்மா காந்தி போன்றோரின் பொன் மொழிகள் என இந்த புத்தகம் சுவையான பொக்கிஷமாக திக்ழ்கிறது… ***********************************

பிளஸ் : சுவையான நடை, ஆழமான கருத்துக்கள்

மைனஸ் : ஒரு ஞானி போல பேசும் பேராசிரியர் சில சமயம் சாதரண மனிதர்களின் நம்பிக்கைகளை ஒட்டி பேசுவது , அந்த பேராசியருக்கும் இளம் வயதில் இந்த நோய் ஏற்பட்டு இருந்தால் அதை எப்படி எதிர் கொண்டு இருப்பார் என்ற கேள்வி வருவது, வேலையில் சில பிரச்சினைகள் வருவதால், தன் ஆசிரியரை பார்க்க இந்த மாணவனுக்கு நேரம் கிடைக்கிறது.. இல்லாவிட்டால், இதில் அக்கரை காட்டி இருக்க வாய்ப்பில்லை… எனவே ஆர்வத்தால் பாடம் கற்றானா( ரா ? ) அல்லது குருட்டு அதிர்ஷ்டத்தில் பாடம் கற்றானா ( ரா? ) என்ற சந்தேகம் வருவது

வெர்டிக்ட் : காரணம் எதுவாக இருந்தாலும், மைனஸ் இருந்தாலும், அவுட் பு சிறப்பாக இருக்கிறது… படிக்க வேண்டிய புத்தகம்…. Tuesdays with Morrie by Mitch Albom

Advertisements
This entry was posted in புத்தகம், Uncategorized and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s