கர்னாடக அரசியலில் அதிரடி திருப்பம்- கவர்னர் , முதல்வர் சமாதானம்

கர் நாடகத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சி அமைத்தாலும் அமைத்தது.. தினந்தோறும் பிரச்சினைகள்தான்..

திடீரென சில எம் எல் ஏக்கள் ஆதரவை விலக்கி கொண்டனர்.. எனவே ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டது… ஆனால் சபானாயகர் அதிரடியாக செயல்பட்டு, எதிர்ப்பு எம் எல் ஏக்களை டிஸ்மிஸ் செய்து அரசை காப்பாற்றினார்.

இந்த டிஸ்மிஸ் செல்லாது என கோர்ட் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து மீண்டும் பிரச்சினை ஆரம்பித்தது.. கர்னாடக அரசை டிஸ்மிஸ் செய்ய கவர்னர் பரிந்துரைத்தார்… இதை எதிர்த்து முதல்வர் உள்ளிட்ட எம் எல் ஏக்கள் , அமைச்சர்கள் டில்லி விரைந்தனர்…

கவர்னரை டிஸ்மிஸ் செய்ய கோரினர்..

இப்போது சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளது..

கர்நாடக பப்ளிக் கமிஷன் வைர விழா, பெங்களூரில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற கவர்னர் பரத்வாஜும், முதல்வர் எடியூரப்பாவும் ஒருவருக்கொருவர் சிரித்து பேசிக் கொண்டனர்.முன்னதாக விழாவிற்கு வந்த கவர்னரை, முதல்வர் நேரடியாகச் சென்று வரவேற்றார்.

இவ்விழாவில் கவர்னர் பரத்வாஜ் பேசியதாவது:கர்நாடக கவர்னராக நான் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டேன். என்னை ராஜினாமா செய்யச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை. என்னை பதவியிலிருந்து எடுக்க வேண்டுமென்றால், ஜனாதிபதியால் மட்டுமே முடியும்.கர்நாடக மாநில வளர்ச்சிப் பணிகள் திருப்தியாக உள்ளது. எனக்கு கர்நாடகத்தில் யாரும் விரோதிகள் கிடையாது. கவர்னர் அதிகாரத்திற்கு உட்பட்டு, என் கடமையை செய்து வருகிறேன். அதிகாரத்தை மீறி எதையும் செய்யவில்லை. நியாயமாக எதைச் செய்ய வேண்டுமோ, அதை செய்துள்ளேன், செய்தும் வருகிறேன்.கர்நாடக மாநிலத்தில் கெங்கல் ஹனுமந்தய்யா, நிஜலிங்கப்பா, ஜாட்டி உட்பட சக்தி வாய்ந்த முதல்வர்கள் பணிபுரிந்துள்ளனர். அந்த வரிசையில், எடியூரப்பாவும் கர்நாடக வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறார். தினமும், 18 முதல், 20 மணி நேரம் வரை உழைக்கிறார்.கர்நாடக மக்களால் முதல்வராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பெரும்பான்மை பலத் தை அவர் பெற்றிருப்பதால், எந்த பிரச்னையும் இல்லை. தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்னை தேவையற்றது, பொறுத்தமற்றது. நாங்கள் அரசியல் சட்டத்தை மதித்து நடந்து வருகிறோம். என் கைகள் சட்டத்தினால் கட்டப்பட்டுள்ளது. ஒரு விருந்தினர் கடவுளுக்கு சமமானவர். அந்த வகையில், கர்நாடகாவுக்கு விருந்தினராக வந்துள்ளேன்.எனக்கு கர்வமோ, ஆசையோ கிடையாது. அரசியலில் தலையிட்டு பெயர் வாங்கும் எண்ணமும் கிடையாது.கர்நாடக கவர்னர் பதவி வகிப்பதில் சந்தோஷப்படுகிறேன். மாநில காவல் துறை, மாவட்ட நிர்வாகங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.எனக்கும், எடியூரப்பாவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. யாரையும் வேறுபாட்டுடன் பார்ப்பது கிடையாது. என் அலுவலக பியூன் முதல், செயலர் வரை அனைவரிடமும் அன்புடனும், பாசத்துடனும் பழகி வருகிறேன். இதையே நானும் எதிர்பார்க்கிறேன்.குறிக்கோளுடன் வாழ்ந்து, ஒருவருக்கொருவர் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். நான் எந்த தவறும் செய்யவில்லை. ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.சட்டசபையில் ஓட்டெடுப்பு நடந்தபோது, கொஞ்சம் அவசரப்பட்டு விட்டனர். அப்போது, சபாநாயகர் எடுத்த முடிவு சரியாக அமையவில்லை என்றார்.

இதற்கு பதிலளித்து முதல்வர் எடியூரப்பா பேசியதாவது:நான் அரசியலுக்கு வருவதற்கு முன், அரசு துறையில் சாதாரண பணியாளராக பணிபுரிந்துள்ளேன். முதல்வரான பின், நான் நிறைய பாடம் கற்றுள்ளேன். வரும் இரண்டு ஆண்டுகளில், மாநில நிர்வாகத்தில் முழு கவனம் செலுத்துவேன். இந்த வகையில், அனைவருடனும் ஒத்துழைப்புடன் பணியாற்றுவேன் என்றார்.

கவர்னர் பேசும்போது, முதல்வரும், முதல்வர் பேசும்போது கவர்னரும் மாறி மாறி கைதட்டி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மாலை, கர்நாடக ராஜ்பவனுக்குச் சென்று கவர்னர் பரத்வாஜை, முதல்வர் எடியூரப்பாவும், அமைச்சர்களும் சந்தித்து பேசினர். ஜூன் 2ம் தேதி, சட்டசபை கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

Advertisements
This entry was posted in அரசியல் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s