பழ கருப்பையா vs ஞானி – யார் சொல்வது சரி ?

கல்கி இதழில் எழுத்தாளர் ஞானி தனது கட்டுரையில்,  திமுகவுக்கும்  அதிமுகவுக்கும் சில ஆலோசனை கள் கூறி இருந்தார்..சசிகலாவை துணை முதல்வர் ஆக்கக வேண்டும்.. அப்போதுதான் அவரை விமர்சிக்க முடியும்.. ஒரு நிழல் தலைவராக அவர் இருப்பது நல்லதல்ல என்பது ஜெயலலிதாவுக்கு  அவர் தந்த ஐடியா.

கலைஞர் ஒய்வு எடுத்து கொள்ள வேண்டும்.. ஸ்டாலினை தலைமையை அழகிரி உட்பட அனைவரும் ஏற்க வேண்டும்.. கலைஞரின் மற்ற குடும்பத்தினர் ஒதுக்கப்பட வேண்டும் என்பது கலைஞருக்கு அவர் தந்த ஐடியா..  தேர்தலுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரை என்பதால், திமுக ஜெயித்தால் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என சொல்லி இருந்தார்..

இதற்கு பதில் அளிக்கும் விதமாக , அதிமுக எம் எல் ஏயும் , எழுத்தாளருமான பழ கருப்பையா விடுத்துள்ள அறிக்கை…

************************************************

கருணாநிதிக்கே இல்லாத கவலை ஞாநிக்கு என்ன வந்தது?- 

– பழ கருப்பையா

எழுத்தைத் தொழிலாகக் கொண்டவர்களுக்குள்ள சிக்கல் .

வாரா வாரம் எதையாவது எழுதியாக வேண்டிய கட்டாயம்!
இந்த வாரம் ஒரு வாரப் பத்திரிகையில் ஸ்டாலின் முதலமைச்சராவதைக் கற்பனை செய்து பார்த்திருக்கிறார் ஞாநி! கத்தரிக்காய் விற்பவன்கூட ஒரு முதல்வராக வருவதாகக் கற்பனை செய்து சில பக்கங்கள் நிரப்ப விரும்பும் எழுத்தாளர்களை யாரும் மறிக்க முடியாது.  ஆனால் அந்தக் கற்பனை நியாயப்படுத்தப்பட வேண்டாமா?
அலைக்கற்றை ஊழல் போன்ற, ஓர் இந்தியக் குடிமகனின் கற்பனைக்கெட்டாத அளவுக்கு 1.76 லட்சம் கோடி ஊழல் செய்த கருணாநிதியின் குடும்பம் மீண்டும் அதிகாரத்தை அடைந்தால், இந்த நாட்டை இனி விலை கூவி விற்றுவிட மாட்டார்களா? நினைக்கவே நெஞ்சு பதறும் இந்தக் கொடுமை மீண்டும் மக்களுடைய அறியாமையால்கூட பீடம் ஏறிவிடக்கூடாது என்று எச்சரிக்க வேண்டிய ஓர் எழுத்தாளன் அப்படி ஓர் ஊழல் நடந்ததாகவே கண்டுகொள்ளவில்லை என்றால் அந்த எழுத்தால் யாருக்கு என்ன பயன்?
ஆட்சி என்பது சிவப்பு விளக்குக் கார்களின் பவனி அல்ல! அது மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு!
கடந்த ஆட்சிக்காலம் முழுவதும் நாடு பல மணி நேரம் இருளில் மூழ்கியது.  அம்மாவின் ஆட்சிக் காலத்தில் உபரி மின்சாரம் பக்கத்து மாநிலங்களுக்கு விற்கப்பட்டது!
புதிய தேவைப் பெருக்கத்தின் விளைவாக இந்த மின்வெட்டு என்றால் புதிய மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கி மின்வெட்டை ஈடுசெய்ய மூன்றரையிலிருந்து நான்காண்டுகள் போதும்.  ஐந்தாண்டுகள் முழுமையாக முடிந்துவிட்ட நிலையில் மின்வெட்டு சென்னையையும் சேர்த்துக் கவ்விக் கொண்டதுதானே கண்ட பலன்!
உற்பத்தியைப் பெருக்காமல் புதிய கிராமங்களுக்கு கருணாநிதி அந்தக் காலத்தில் மின்சாரம் வழங்கியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டபோது, கம்பி நீட்டுகிறார் கருணாநிதி என்று காமராசர் கேலி செய்தார்! கருணாநிதியின் ஆட்சித் திறன் அன்றும் இன்றும் இது தான்!
அழகிரியை, ஸ்டாலினின் தலைமையை ஏற்றுக்கொண்டு ஒரு மாநில அமைச்சராகப் பணியாற்றச் சொல்லுங்கள் என்று கருணாநிதிக்கு யோசனை சொல்கிறார் ஞாநி!
தா. கிருட்டிணன் தன்னைத் தானே வெட்டிக்கொண்டு செத்தார் என்பதும், மதுரை செய்தி அலுவலகத்தில் மூன்று பேர் தங்களைத் தாங்களே எரித்துக்கொண்டு செத்தார்கள் என்பதும் ஞாநியின் கருத்துப்போலும்!
இவ்வளவு பெரிய பாதகச் செயலைச் செய்தவர்கள் அரசியலில் இருக்கலாமா என்று கேட்க வேண்டிய ஞாநி, அழகிரி ஸ்டாலினின் தலைமையை ஏற்காவிட்டால் குடிமுழுகிப் போய்விடும் என்று கசிந்துருகுகிறார்!  அந்தக் குடி ஒன்றிணைந்து பணியாற்றி மீதிக் கொள்ளையை அடிக்க வேண்டுமானால் அழகிரி, ஸ்டாலினின் தலைமையை ஏற்பது இன்றியமையாதது என்று கருணாநிதிகூடச் சொல்லவில்லை.  ஞானி சொல்கிறார்!  கருணாநிதிக்கே இல்லாத கவலை ஞானிக்கு!
2006​ல் அம்மாவின் ஆட்சி இறுதிக் காலத்தில் தமிழ்நாட்டின் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி 11.89 விழுக்காடு.  2011​ல் கருணாநிதி காலத்தில் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி 4.49 விழுக்காடு.  நாட்டின் வளர்ச்சி மூன்றில் ஒரு பங்காகச் சரிந்துவிட்டது.  ஜார்க்கண்டிற்கும் சத்தீஸ்கருக்கும் கீழே தமிழ்நாட்டைக் கொண்டு போய்விட்ட தி.மு.க. ஆட்சி தொடர்வதற்கு யோசனை சொல்லும் எழுத்து தமிழ்நாட்டின் நலனில் அக்கறை உடைய எழுத்தாக இருக்க முடியுமா?
தன்னுடைய ஆட்சிக் காலத்தில் மழைநீ ர் சேமிப்பு உடனடி இன்றியமையாப் பணி என்று உணர்ந்த நிலையில் முதலமைச்சர் அம்மா மக்களை நெருக்கி அதை நடைமுறைப்படுத்தி அடி ஊற்றைப் பெருக்கச் செய்யவில்லையா? தான் செயல்படுவது மட்டுமல்ல; மக்களையும் செயல்படச் செய்பவர்தான் நல்ல தலைவர்!
தனியார் பள்ளிகளின் கட்டணத்தைச் சீர்படுத்த எண்ணிய கருணாநிதி அரசு குழு மேல் குழுவாகப் போட்டதுதான் கண்ட பலன்! இன்றுவரை கட்டணத்தைக் குறைக்க முடிந்ததா? மாணவர்களின் துயரத்தைப் போக்க முடிந்ததா? பராசக்திக்கு வசனம் எழுதுவது வேறு, ஆட்சித் திறன் என்பது வேறு!
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு கர்நாடகத்திலிருந்து பணம் வருத்தி தூதுவர்கள் மூலம் கொடுத்து, மீதி யானைகளையும், மீதி அதிகாரிகளையும் கொல்வதற்கு வழிவகுத்துக் கொடுத்த பரிவில்லாக் கோழை கருணாநிதி.  அவனைச் சுட்டுக்கொன்று சந்தனக் காடுகளையும், யானைகளையும் காத்த வீராங்கனை அம்மா! எது ஆட்சித் திறன்? சொல்ல வேண்டாமா ஞாநி?
ஜெயலலிதா நாட்டுப் பணியாற்றுகிறவர்கள்; அவர்களின் காரியங்களைப் பார்க்க ஒரு நம்பிக்கையான ஆள் வேண்டும்.  ஜெயலலிதாவை எந்த நேரமும் நெருங்கி நல்லது கெட்டதை அறிந்து செயல்பட வேண்டும். ஜெயலலிதா ஒரு பெண்.  தன்னந்தனியாக வசிப்பவர்கள்.  அவர்களை எந்த நேரத்திலும் நெருங்கிச் செயல்படவும், துணையாக உடனிருக்கவும் இன்னொரு பெண்ணால்தான் இயலும். அந்தத் தேவையை நிறைவு செய்கின்ற ஊழியராக, தோழியாக, உடன்பிறவாச் சகோதரியாக 27 ஆண்டுகளுக்கு முன்பே வந்தவர்கள் சசிகலா!
நேற்றுவரை கனிமொழியும் ஆ.ராசாவும்  வேறோ? நான் வேறோ? என்று பாட்டுப் பாடினார்கள்.  இன்று நீதிமன்ற நெருக்கடி வந்துவிட்டது என்றவுடன்  யாரோ? நான் யாரோ? என்று அறுத்துக் கொண்டு விட்டார்கள்! இதுதான் கோபாலபுரத்துப் பண்பாடு.
மெல்லுவதற்கு எதுவும் இல்லாதபோது சசிகலாவை இழுத்துவைத்துப் பேசுவது சில எழுத்தாளர்களின் இயல்பு!
வாசந்தி, ஜெயலலிதாவைப்பற்றி எழுதி இருந்த நூலுக்கு ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருப்பதை, சகிப்பு மனப்பான்மை அற்ற தன்மை என்கிறார் ஞாநி!
ஜான்சனோடு பாஸ்வெல் இரண்டறக் கலந்து அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அம்மாவோடு வாசந்தி பழகியவருமில்லை; அவரை அறிந்தவருமில்லை!
ஜெயலலிதாவின் தனி வாழ்க்கை குறித்த செய்திகளை வாசந்தி அறிந்திருக்க நியாயமில்லை.  ஜெயலலிதாவிடம் கேட்டறிந்து எழுதியிருக்க வேண்டும் அல்லது தன்னிடமிருந்த செய்திகளை ஜெயலலிதாவிடம் சரிபார்த்துக் கொண்டிருக்க வேண்டும்! அதுதான் எழுத்து தருமம்!
புத்தகத்தில் சூடேற்றுவதற்காகத் தாறுமாறான செய்திகளை உண்மைபோல் சொல்ல முற்பட்டால், அந்தப் புத்தகத்தின் பிறப்பைத் தடுத்து நிறுத்துவது அறிவுலகின் கடமை!
உண்மைக்கும் உண்மைத் திரிபுக்கும் வேறுபாடு தெரியாமல் வாசந்திக்குப் பரிந்து நிற்கிறார் ஞாநி! வாசந்தியின் எழுத்து உண்மைத் திரிபு! ஈழத்தைச் சுடுகாடாக்கத் துணை நின்ற கருணாநிதி ஒரு தமிழினத் துரோகி அவருடைய ஆட்சி தொடர்வதை ஒரு பேச்சுக்காக ஏற்றுக்கொண்டு எழுதுவதைப் படிக்கும்போதுகூட அடிவயிற்றில் குமட்டுகிறது!
கருணாநிதியுடன் நாளும் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு, அவரைப் புகழ்கிற விழாக்களுக்கெல்லாம் சென்று முதல் வரிசையில் அமர்ந்து கைதட்டிவிட்டு, ஓட்டை இரட்டை இலைக்குத்தானே போட்டிருக்கிறார் ரஜினிகாந்த்!
இதுதான் நாட்டின் மனநிலை!புரிகிறதா ஞாநி?

Advertisements
This entry was posted in Uncategorized and tagged . Bookmark the permalink.

2 Responses to பழ கருப்பையா vs ஞானி – யார் சொல்வது சரி ?

 1. Jo.Amalan says:

  நீங்கள் செய்திருப்பதும் சரியல்ல. ஞானியின் கட்டுரையை முழுதாகப்போடாமல், பழ க வின் கட்டுரையை முழுதாக அல்லது விரிவாகப்போட்டது சரியா ? நான் வாசந்தியைப் பற்றி ஞானி எழுதியிருப்பது பழ க சொல்லித்தான் தெரிகிறது.

  நீங்கள் போட்டதை அப்படியே எடுத்துப்பேசினால், பழ கருப்பையா சரியல்ல.

  ஞானி தி மு க‌ ஆட்சிக்கு வ‌nthaதால் என்ன‌ செய்தால் அக்க‌ட்சிக்கு na‌ல்ல‌து என்றும் அ தி மு க‌ வ‌ன்தால் aது அக்க‌ட்சிக்கு ந‌ல்ல‌து என்றும் சொன்ன‌மாதிரிதான் இருக்கிற‌து. அவ‌ர் ஸ்டாலின் வ‌ன்தால் நாட்டுக்கு ந‌ல்ல‌து; ச‌சிக‌லா துண‌ முத‌ல்வ‌ரானால் நாட்டுக்கு ந‌ல்ல‌து என்று சொல்ல‌வில்லை. ப‌ழ க‌ ஓவ‌ர் ரீயாக்ட் ப‌ண்ணிவிட்டார். அத‌ற்கு கார‌ண‌ம் அவ‌ர் இன்த‌ ச‌ன்த‌ர்ப்ப‌த்தைப் ப‌ய‌ன்ப‌டுத்தி ஜெக்கு ஜால்ரா த‌ட்ட‌ எழுதியிருக்கிறார். ஜெ க‌ண்டிப்பாக‌ப் ப‌டித்து ப‌ழ க‌ வின் மீது ந‌ம்பிக்கை கொள்வார் என‌ற‌ எண்ண‌ம்.

  ச‌சிக‌லாவைப்ப‌ற்றி ப‌ழ க‌ சொன்ன‌து ச‌ரிய‌ல்ல‌. ஜெ ஏன் இன்னொருவ‌ன் ம‌னைவியை அவ‌னிட‌மிருன்து பிriக்க‌வேண்டும். த‌ன‌க்கு ஒரு தாதி வேலை செய்ய‌ பெண் வேண்டுமென்றால் ஏன் ஒரு மேட்டுக்குடிப்ண்ணைத் தேர்ன்த்டுக்க‌வேண்டும் ? த‌ன் உற‌வின‌ர்க‌ளிட‌ம் கேட்டால் ந‌ல்ல‌ பெண்ணை அனுப்புவ‌ர். அவ‌ர‌ண்ண‌ன் சென்னையில்தானே இருக்கிறார் ? எது எப்ப‌டியாயினும் இன்னொருவ‌ன் ம‌னைவியைத் த‌ன‌க்கு வேண்டுமென‌ப் பிரித்த‌ல் த‌வ‌றாகும்.

  மேலும் ச‌சிக‌லா வெறும் தாதி வேலை ம‌ட்டுமா ப‌ண்ணுகிறார் ? அவ‌ர் க‌ட்சி, ஆட்சி இர‌ண்டிலுமே ராஜ்ஜிய‌ம் ந‌ட‌த்துகிறாரே? அவ‌ரின் அண்ண‌ன் ம‌க‌னை ஏன் ஜெ த‌த்து எடுத்து ம‌கா க‌லியாண‌ம் ந‌ட‌த்த‌வேண்டும் ? ஆராவ‌து வீட்டில் வேலைக்கு வைத்த‌ பெண்ணை இப்ப‌டி ஆண்டு ஆள‌ அனுப‌விkka viduvaarfkaLaa?

  பழ‌ க‌ருப்பையா ஜால்ரா த‌ட்ட‌ வேண்டிய‌ அவ‌சிய‌த்தால் இப்ப‌டி பேசுகிறார்! ஞானிக்கு அப்ப‌டி ஆருக்கும் ஜால்ரா த‌ட்ட‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை என‌ நினைக்கிறேன்.

 2. marmayogie says:

  தமிழகமே ரஜினி தான் என்பதுபோல கட்டுரை முடிந்துள்ளது உங்களது கேவல புத்த்தியை காட்டுகிறது.
  ரஜினி ஒரு ஆர் எஸ் எஸ் காரர்.
  அவர் எப்படி அசன் அலி ஜின்னா என்ற முஸ்லிம் வேட்பாளருக்கு ஒட்டு போடுவார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s