கணிப்பு தவறியது ஏன்? நக்கீரன் கோபால் விளக்கம்

தேர்தலும் கருத்து கணிப்பும் பிரிக்க முடியாதவை… பலரும் கருத்து கணிப்புகளை வெளியிடுகிறார்கள்…

சில பலிக்கின்றன.. சில பலிப்பதில்லை…

தாம் சொன்னது நடந்து விட்டால், அந்த பெருமையை ஏற்றுகொள்ளும் பத்திரிக்கைகள், அது நடக்காவிட்டால், விளக்கம் எதுவும் அளிப்பதில்லை..

இந்த நிலையில் நக்கீரன் கணிப்புகள் வெளி வந்து இருந்தன.. அந்த அடிப்படையில், திமுகதான் வெல்லும் என தேர்தல் முடிவு வெளிவரும் சற்று முன்பு கூட நம்பிக்கையுடன் சொல்லிக்கொண்டு இருந்தார் நக்கீரன் கோபால்..

ஆனால் அவர் நம்பிக்கை பொய்த்தது…

ஓகே…இதற்கு விளக்கம் அளிப்பாரா , அல்லது இதை அப்படியே மறந்து பத்திரிக்கை “ தர்மத்தை “ காப்பாரா என எதிர்பார்த்த எனக்கு இன்ப அதிர்ச்சி..
முதல் பக்கத்திலேயெ , நடந்த த்வறுக்கு வருத்தம் தெரிவித்து இருக்கிறார்..

அவரை பாராட்டுவது நம் கடமை..வேறு யாரும் இப்படி செய்து நாம் பார்த்தது இல்லை…

இதோ.. அவர் விளக்கம்

************************************

வருத்தம்

சென்ற தேர்தல்களில் நக்கீரன் கணிப்புகள் நூற்றுக்கு நூறு சரியாக இருந்ததை வாசகர்களும், அரசியல் பிரமுகர்களும், மக்களும் மறக்கவில்லை.. ஆனால் இந்த முறை தவறி விட்டது.

கருத்து கணிப்புகளை மேற்கொள்வதற்கு என்ன நடைமுறைகள் மேற்கொள்ளப்படுமோ அதே விஞ்ஞான முறையையே கையாண்டோம். முடிவுகளை பாரபட்சமின்றி வெளியிட்டோம்..

தற்போது ஏன் சர்வே தோற்றது என்பதை ஆராய்ந்தோம். சாம்பிள்களில் தவறா, எடுக்கப்பட்ட முறை தவறா, சர்வே முடிவை தொகுதிகளாக மாறுவதில் தவறா என வல்லுனர்களிடம் கேட்டோம். இதெல்லாம் சரியாகவே இருப்பதாக அவர்கள் கூறினர்.
பிறகு ஏன தோல்வி ஏற்பட்டது என ஆராய்ந்தோம்.. நாம் தனியார் நிறுவனங்களை நம்பாமல் நேரடியாக சர்வே செய்தோம். சர்வே படிவத்தின் தலைப்பில் நக்கீரன் என்ற பெயர் இருந்தது. எனவே மக்கள் உண்மையான முடிவை சொல்லாமல், ஜெயலலிதாவுக்கு நக்கீரன் எதிரி என கருதி, மாற்றி சொல்லி இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.. இதனால்தான் கணிப்பு தவறி விட்டது..

என்ன காரணம் சொன்னாலும் தவறு தவறுதான். இதை நேர்மையுடன் ஒப்புக்கொண்டு நக்கீரன் தன் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது. வாசகர்கள் தொடர்ந்து ஆதரவு அளீக்க வேண்டும் என கேட்டு கொள்கிறது.

*******************************************************

நக்கீரனுக்கு நம் பாராட்டுக்கள்.

Advertisements
This entry was posted in தேர்தல் and tagged , . Bookmark the permalink.

One Response to கணிப்பு தவறியது ஏன்? நக்கீரன் கோபால் விளக்கம்

  1. manimuthu.s says:

    நக்கீரன் ,

    தோல்வியை ஒத்துக்கொண்டது,

    காரணஞ் சொன்னது,வருத்தம் தெரிவிப்பது,

    அவர்களின் பெருந்தன்மை.

    பாராட்டுக்கள்.நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s