பிரபஞ்ச படைப்பு ரகசியம்- ஸ்டீபன் ஹாக்கிங் புத்தக பார்வை

In the beginning there was neither existence nor non-existence, All this world was un manifest energy . . . The One breathed, without breath, by Its own power Nothing else was there . . . — Hymn of Creation, The Rig Veda

எத்தனையோ அறிவியல் புத்தகங்கள் வந்துள்ளன. அதில் சற்றே வித்தியாசமான புத்தகம்தான் , ஸ்டீபன் ஹாக்கிங் எழுதியுள்ள த கிராண்ட் டிசைன் என்ற புத்தகம்.. ஏன் அப்படி சொல்கிறேன்… ? காரணம் இருக்கிறது.. உலகம், இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது… நாம் எப்படி உருவானோம் என்பது மனித இனத்தின் நீண்ட நாள் தேடல்… எப்படி தோன்றியது என்பது ஒர் கேள்வி என்றால் ஏன் தோன்றியது என்பது இன்னும் சுவாரஸ்யமான கேள்வி.. இதற்கு ஆன்மீகம் சில விடைகளை தருகிறது… அறிவியல் சில விடைகளை தருகிறது… ஒரு தரப்பு சொல்வதை இன்னொரு தரப்பு ஏற்பதில்லை. எனவே இது சம்பந்தமாக எழுதப்படும் புத்தகங்கள் பெரும்பாலும் ஒரு தலைப்பட்சமாக இருக்கும். தகவல்களை மறைத்தோ, திரித்தோ எழுதுவார்கள்… இந்த நிலையில் ஸ்டீபன் ஹாக்கிங் என்ற அறிவியல் மேதை , இந்த டாபிக் குறித்து என்ன எழுதி இருக்கிறார் என தெரிந்து கொள்ளும் ஆவலுடன் புத்தகத்தை புரட்டினேன்.. படிக்க படிக்க சந்தோஷம் , வியப்பு, பரவசம், என பல்வேறு உணர்ச்சிகள் ஏற்பட்டன… அவர் என்னதான் சொல்கிறார்… பாருங்கள்… உலகத்தை படைக்க கடவுள் தேவை இல்லை… இயற்பியல் விதிகளே போதுமானவை… உலகை யாரேனும் ஒருவர் உருவாக்கி இருக்க முடியாது. கடவுள் உலகை உருவாக்கி இருந்தாலும், அவர் இஷ்டத்துக்கு உருவாக்கி இருக்க முடியாது..இயற்பியல் விதிகளுக்கு கட்டுப்பட்டே அவர் செயலாற்றி இருக்க முடியும்.. சரி… இதை எல்லாம் சொல்லி விட்டு , வேறு என்ன சொல்கிறார் என்பதே புத்தகத்தை சுவை மிக்கதாக்குகிறது.. ஒன்றும் இல்லாத நிலையில் இருந்தே ( சூனியத்தில் இருந்தே ) உலகம் தோன்றி இருக்கிறது… உலகம் அழிந்து சூனியம் ஆகி விட்டாலும், அந்த சூனியத்தில் இருந்து மீண்டும் உலகம் தோன்றும். அறிவியல் சொலவ்து எல்லாம் முழு உண்மை என சொல்ல முடியாது… ஒரு தண்ணீர் தொட்டியில் இருந்து உலகை பார்க்கும் மீன், தன் கண்ணுக்கு என்ன தெரிகிறதோ அதைத்தான் உண்மை என நம்பும்.. அதை பொருத்தவரை அதுதான் அதற்கு அறிவியல் உண்மை. அதே போல , நம் புலன்களுக்கு புலப்படும் விஷ்யங்களை வைத்து சில முடிவுகளுக்க்கு வருகிறோம். இது முழு உண்மை என சொல்ல முடியாது… நம் புலன்கள் சார்ந்த உண்மைதான் இது.. சில விஷயங்களை தீர்மானமாக கண்டு பிடிக்கவே முடியாது சில பொருட்களை பார்க்க முடியாது.. சில சோதனைகள் மூலம் அவை இருக்கின்றன என நிரூபிக்க முடியும் நாம் செய்யும் சோதனை , சோதனையின் முடிவை பாதிக்க கூடும்.. காலம் என்பது மாறக்கூடியது… ஒருவருக்கு நூறு வருடங்கள் என்பது இன்னொருவருக்கு ஒரு நாள் ஆக இருக்கலாம் ( சில சினிமாக்களை பார்க்கும் போது வெகு நேரம் படம் ஓடுவதாக தோன்றும். சில படங்கள் சீக்கிரம் முடிவது போல இருக்கும். இது மன ரீதியானது… புத்தகம் பேசுவது இதை அல்ல ) க்ரியேஷன் என்பதன் சாத்தியக்கூறுகள் எண்ணற்றவை… ஒவ்வொன்றும் அதனதன் அளவில் உண்மைதான்.. அறிவியலின் ஆழத்துக்கு செல்ல செல்ல, நம் அன்றாட வாழ்வின் உண்மைகள் அர்த்தம் இழக்கின்றன…. இதை எல்லாம் படித்தால், அறிவியல் போல தோன்றுகிறதா அல்லது ஆன்மீகம், தத்துவம் போல தோன்றுகிறதா? அறிவியல் பூர்வமாக உலகம் எப்படி தோன்றியது? கடவுள் இருக்கிறாரா? பிரபஞ்சம் என்பது என்ன? காலம் என்பது என்ன? விரிவாக அடுத்த பதிவில்… (தொடரும் )

Advertisements
This entry was posted in புத்தகம் and tagged , . Bookmark the permalink.

4 Responses to பிரபஞ்ச படைப்பு ரகசியம்- ஸ்டீபன் ஹாக்கிங் புத்தக பார்வை

 1. கடவுள் இருக்கிறா என்று தெரிந்து என்ன செய்யப்போகிறோம்?!
  ஆராய்சி என்ற அளவில் விபரங்களை தோண்டித்தோண்டி துருவிக்கொண்டு இருக்கலாம்.
  ஒருவேளை நமக்கு இரண்டு மூளை வந்தால் ஏதாவது கொஞ்சம் புரியும்!!
  இருக்கிற மூளையிலேயே 10 சதவீதம் தான் உபயோகப்படுத்துகிறோம் என்று வேறு சொல்கிறார்கள்.

 2. aneslin says:

  இதன் தொடர்ச்சி எப்ப வரும் நண்பரே?
  The Grand Design and The brief history of time ம் வாங்கி வைத்து நாளாகிறது. இன்னும் தொடங்கவில்லை. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
  சுபாஷ்

 3. j.mahendran says:

  migavum nandru

 4. chinnadurai says:

  Miga sirantha pathivu. Nandri keep it up!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s