வாக்களிப்பு அதிகம் என்றால் வெற்றி யாருக்கு? – தேர்தல் அலசல்

தேர்தல் முடிந்து விட்ட நிலையில், வரலாறு காணாத ஓட்டு பதிவு கட்சிகளை குழப்பி இருக்கிறது. 

வாக்களிப்பு அதிகம் என்றால் என்ன அர்த்தம் என்பது ஒவ்வொரு நாட்டுக்கும், மா நிலத்துக்கும் வித்தியாசப்படும்..

இடைத்தேர்தலில் வாக்களிப்பு அதிகம் என்றால் அது வேறு விஷயம். பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் ஆட்களை கூட்டி வந்து வாக்களிக்க செய்வார்கள் என்பதால் ஓட்டு கூடும். ஆனால் பொது தேர்தலில் அப்படி செய்ய முடியாது..

சரி,

தமிழ் நாட்டில் இது வரை வாக்களிப்பு எப்படி இருந்தது ?

அசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரஸ் வீழ்த்தப்பட வேண்டும் என்ற அலை காரணமாக 1967ல் 76 சதவிகிதம் வாக்கு பதிவானது.

1971 ல் எந்த அலையும் இல்லை.. ஆளும் கட்சியே வென்றது… வாக்கு சதவ்கிதம் குறைந்தது ( 72 % ).. அந்த தேர்தலில் வாக்களிப்பு அதிகரித்து இருந்தால் , எதிர் கட்சி  காங்கிரஸ் வென்று இருக்கும்.

1977 ல் தி மு க அரசு கலைக்க பட்டு இருந்தது.. அலை வீசி இருந்தால், வாக்களிப்பு அதிகரித்து இருந்தால், தி மு க வென்று இருக்கும்.. ஆனால் வாக்களிப்பு குறைவு ( 61.58 % ) ..
எனவே தி மு க தோல்வி. அதிமுக வென்றது

1980ல் அதிமுக அரசு கலைக்க பட்டு  இருந்தது… வாக்களிப்பு அதிகரித்தால், அனுதாப அலை என்று பொருள்..
அதே போல வாக்களிப்பு அதிகரித்தது ( 65.42 % ) . அதிமுக வென்றது

1984 ல் இந்திராகாந்தி அனுதாப அலை வீசியது. வாக்களிப்பு கூடியது (73.47 % ) காங்கிரஸ் கூட்டணி வென்றது..

1989 ல் ,  எந்த அலையும் இல்லை..(69.79% ) அதிமுக இரண்டாக போட்டி இட்டதால், திமுக தன் வழக்கமான வாக்குகளை பெற்று வென்றது

1991ல் ராஜீவ் அனுதாப அலையால் அதிமுக வென்றது ( 63.84 % ) இதை மீறி திமுக வெல்ல வேண்டுமானால் , திமுக கலைக்கப்ப்ட்ட அனுதாப அலை வீசி , வாக்களிப்பு அதிகரித்து இருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை

1996 ல் ரஜினி வாய்ஸ் , அதிமுக எதிர்ப்பு அலை ஆகியவற்றால் ஓட்டு அதிகரித்தது ( 66.95 % ) . வழக்கமான ஓட்டு மட்டும் பதிவாகி இருந்தால் , அதிமுக – காங்கிரஸ் வென்று இருக்கும்.. ஆனால் அலை வீசியது… தி மு க வென்றது

2001 அலை எதுவும் இல்லை… வழக்கமான ஒட்டுக்கள்தான்..( 59 % _. கூட்டணி பலத்தால் அதிமுக வென்றது

2006ல் விஜயகாந்த் புதிய வாக்காளர்களை கவர்ந்து இழுத்ததால் , வாக்களிப்பு கூடியது ( 70 % ) .. அலை அற்ற தேர்தலில், கூட்டணி பலத்தால் தி முக கூட்டணி  வென்றது

****************************************

இந்த தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. ( 76 % )
எனவே அலை வீசி இருப்பது தெரிகிறது…

கடந்த காலத்தை வைத்து பார்க்கும்போது, மாற்றத்துக்கான அறிகுறியாகவே தெரிகிறது…

Advertisements
This entry was posted in தேர்தல் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s