புனித ஸ்தலங்கள் இடிப்பு- எகிப்தில் இஸ்லாம் விரோத செயல்கள் ஆரம்பம்

நல்ல விஷ்யம் ஒன்று நடந்தால், இலவச இணைப்பாக கெட்ட விஷ்யமும் சேர்ந்து நடப்பது உலக இயல்பு.

இதைத்தான் அமிர்தம் தேடும்போது நஞ்சும் சேர்ந்து கிடைத்ததாக சொல்வார்கள்.

எகிப்தில் மக்கள் புரட்சி வென்றது நல்ல விஷ்யம். ஆனால் அதற்கு பின் நடக்கும் சில விஷ்யங்கள் இஸ்லாமிய கொள்கைகளுக்கு விரோதமாக இருக்கின்றன. எனவே ஆன்மீகவாதிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முபாரக்கின் வெளியேற்றத்திற்கு பிறகு, எகிப்தில், இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலமான தர்காக்கள் இடிக்கப்படுகின்றன.
இதை செய்வது மாற்று மதத்தினர் அல்லர்.. இஸ்லாம் சொல்வதை முழுதும் அறியாமல் , இஸ்லாமியர்கள் சிலரே இந்த கொடும் செயலை செய்வதுதான் இதில் இருக்கும் வேதனை
“தர்காக்கள் ஹராமென்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் இப்படி நடந்து கொள்வது தான் ஹராம் என்று அவர்களுக்கு புரியவில்லை” என்று கல்யுப் நகரவாசியான ஹுசைன் அஹமத் வேதனையுடன் கூறினார்..
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இமாமான அப்துல் ஹே, இது குறித்து பேசும் போது,  “தர்காக்களை அகற்ற அவர்கள் கையாண்ட முறைகள் தவறுதான். புத்தகங்களை தாங்களாக படித்து ஒரு முடிவுக்கு வருகின்றனர். இது தவறான பாதைக்கு வழி வகுக்கும். ” என்றார்
பாகிஸ்தானில் நடைபெறும் தர்காக்களுக்கு எதிரான செயல்களை போலவே எகிப்திலும் நடைபெறுவதாக ராய்டர்ஸ் தெரிவிக்கின்றது. கடந்த ஞாயிற்றுகிழமையன்று எகிப்தின் மற்றொரு நகரமான டாலாவில் ஒரு தர்காவுக்கு தீ வைக்கப்பட்டது.
அல்லாவின் பாதையில் நடந்து வாழ்ந்து காட்டிய மகான்களின் அடக்க ஸ்தலம்தான் தர்க்கா. சாதாரணமாக இறப்பது வேறு.. அவர்கள் நிலை வேறு என்கிறது புனித நூலான அல்குர் ஆன் ..

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோர்களை இறந்தோர் என சொல்லாதீர்கள். அவர்கள் உயிருடன் தான் உள்ளனர். எனினும் உணர மாட்டீர்கள் – அல்குர் ஆன் 2.154

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோர்களை இறந்தோர் என எண்ணாதீர்கள். அவர்கள் இறைவனிடம்  உயிருடன் தான் உள்ளனர்.உணவளிக்கப்படுகின்றனர் – அல்குர் ஆன் 3.169

ஒரு நல்லடியார் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவுடன் கேள்விகள் கேட்கப்படும். அவர் சரியாக பதில் சொல்லுவார்.அதன் பின்னர் “ புது மணமகனைப்போல  நீ உறங்கு. அல்லாஹ் உன்னை எழுப்பும்வரை உறங்கு “ என சொல்லப்படும் என நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்

ஆதாரம் :
அஹ்மத் , திரிமதீ நூல்கள்

அல்லாவை தவிர யாரையும் வணங்க கூடாது என்பது இஸ்லாம் நெறி. எனவே மகான்களை வணங்குதல், அவர்கள் அற்புதங்கள் செய்வதாக சொல்வது எல்லாம் தவறு என நினைக்கின்றனர் சிலர். ஆனால், இது போன்ற அற்புதங்களுக்கு குர் ஆனிலேயே சான்றுகள் இருக்கின்றன.

அதே போல ஒரு மகான் அற்புதம் செய்கிறார் என்றால் அதற்கு காரணம் அல்லாஹ்தான்.. எனவே இவற்றை மறுப்பது இறைவனையே மறுப்பது போலாகும் என்பது இவர்களுக்கு புரியவில்லை..

எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பம் இன்றி அற்புதம் நடத்த முடியாது .ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது – அல்குர் ஆன் 13.18

நாங்கள் உங்களை போன்ற மனிதர்கள்தான், ஆயினும் த்னது அடியார்களில் தான்  நாடியவர் மீது அல்லா அருள் புரிகிறான். அல்லாஹ் விருப்பம் இன்றி எந்த ஓர் அற்புதத்தையும் எங்களால் கொண்டு வர முடியாது – அல்குர் ஆன் 14.11

அல்லாஹ்வை அஞ்சி கொள்ளூங்கள். ஒரு வஸீலாவை தேடிக்கொள்ளுங்கள் அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள்- அல்குர் ஆன் 5.35

அடக்கஸ்தலங்களுக்கு செல்லுமாறுதான் இஸ்லாம் சொல்கிறதே தவிர , அதை இடிக்குமாறு சொல்லவில்லை..

எனவே இது போன்ற செயல்களில் – தர்க்காக்களை இடிப்ப்து போன்றவற்றில் ஈடுபடுவது – இஸ்லாம் நெறிக்கு விரோதமானது என இஸ்லாம் அறிஞர்கள் கருதுகின்றனர்..

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கப்ருகளை ஸியாரத் செய்ய நான் தடை செய்திருந்தேன். முஹம்மத் தன் தாயாரின் கப்ரை ஸியாரத் செய்ய அனுமதிக்கப் பட்டுவிட்டார். எனவே நீங்களும் ஸியாரத் செய்யுங்கள். அறிவிப்பவர்: புரைதா (ரலி) ஆதாரம்: திர்மிதி 974

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

கப்ருகளை  ஸியாரத்  செய்யுங்கள். ஏனெனில்  நிச்சயமாக  அது இவ்வுலகத்தில்  பற்றற்ற  நிலையை உண்டாக்கி  மறுவுலக வாழ்வைப்  பற்றிய  நினைவையும்  ஏற்படுத்த  வல்லது.

இப்னு மாஜா – 1569, மிஷ்காத் – 154

கண்மணி நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
உங்களை (முதலில்) கப்ருகளை ஸியாரத் செய்ய தடை செய்திருந்தேன். (தடை நீக்கப்பட்டது இனிமேல்) அவைகளை ஸியாரத் செய்யுங்கள்.

புரைதா ரலியல்லாஹு அன்ஹு
முஸ்லிம், திர்மிதி, ஹாகிம், அபூதாவூத், இப்னு ஹிப்பான்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் ஷுஹதாக்களின் கப்ருகளை ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். மேலும் அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரும் அப்படியே செய்பவர்களாக இருந்தார்கள்.

தபரானி 3 – 241

கண்மணி நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
என் தாயின் கப்ரை ஸியாரத் செய்ய என் இறைவனிடம் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதியளித்துள்ளான். எனவே, நீங்களும்,கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில், அது மரணத்தை நினைவுபடுத்தும்.
அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு
முஸ்லிம், திர்மிதி, அபூதாவூது, நஸயீ.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தமது மனைவிமார்களில் ஆயிஷா நாயகி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் முறை வரும் பொழுதெல்லாம் நள்ளிரவின் கடைசிப் பகுதியில் (தஹஜ்ஜது நேரத்தில்) ஜன்னத்துல் பகீஉக்குச் சென்று ஸியாரத் செய்து அங்கு அடங்கியிருக்கக் கூடியவர்களுக்கு பிழை பொருக்கத்தேடி விட்டு வரும் பழக்கத்தை கொண்டர்வர்களாக இருந்தார்கள்.

முஸ்லிம் 1 – 313, மிஷ்காத் 154

கண்மணி நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
எவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் தனது பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ ஸியாரத் செய்து வந்தால் அவரின் பாவங்கள் பொறுக்கப்படுவதுடன் நல்லவர் என்றும் எழுதப்படும்.

பைஹகி, மிஷ்காத் – 154

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மதீனாவில் உள்ள கப்ருகளுக்கு அருகே சென்றார்கள். அப்பொழுது தங்களின் திரு முகத்தை கொண்டு கப்ருவாசிகளின் மீது முன்னோக்கி சலாம் கூறினார்கள்.

மிஷ்காத்: 2 – 407

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தனது தாயாரின் கப்ரை ஸியாரத்து செய்தார்கள். மேலும் அவ்விடத்திலே அழுதார்கள். அவர்களின் அழுகையை பார்த்து சூழ இருந்த ஸஹாபாக்கள் கண்ணீர் சொரிந்தார்கள்.

முஸ்லிம், மிஷ்காத் – 154

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
எவராவது கப்ருஸ்தானக்களுக்கு சென்று சூரா யாசீன் ஓதினால் கப்ராளிகளை தொட்டும் வேதனை லேசாக்கப்படுகிறது. மேலும் ஓதியவருக்கு அந்த கப்ராளிகளின் எண்ணிக்கையளவு நன்மைகள் கிடைக்கின்றன.

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
மிஷ்காத் 4 – 382

ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் புனித ரவ்லா ஷரீஃப் சென்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களையும், அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் பர்தா அணியாமலேயே ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். பின்னர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அதில் அடக்கம் செய்யப்பட்டபோது பர்தா அணிந்து ஸியாரத்து செய்பவர்களாக இருந்தார்கள்.

மிஷ்காத் – 154

அன்னை பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஸியாரத் செய்து வந்ததார்கள்.

முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் 3-572, முஸ்தத்ரக் 1-377

மக்காவில் அடங்கப்பட்டிருக்கும் அப்துர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அன்னவர்கள் மக்காவுக்கு சென்று ஜியாரத் செய்து வருபவர்களாக இருந்தார்கள்.

அபி முலைகா ரலியல்லாஹு அன்ஹு
மிஷ்காத் – 149 முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் 3 – 5079

 

Advertisements
This entry was posted in Uncategorized and tagged , . Bookmark the permalink.

4 Responses to புனித ஸ்தலங்கள் இடிப்பு- எகிப்தில் இஸ்லாம் விரோத செயல்கள் ஆரம்பம்

 1. >>நல்ல விஷ்யம் ஒன்று நடந்தால், இலவச இணைப்பாக கெட்ட விஷ்யமும் சேர்ந்து நடப்பது உலக இயல்பு.

  ஹி ஹி உண்மைதான்

 2. asalamsmt says:

  Brother, assalaamu alaikkum

  You can raise this question, you will get good answer from the following islamic groups
  and so many things we can identify and clarify things more and more, please

  unitedtamilmuslims@yahoogroups.com;
  unitedindianmuslims@yahoogroups.com
  tamilmuslimbrothers@googlegroups.com

 3. இடங்களுக்கு இஸ்லாத்தில் நிறைய முக்கியத்துவம் உண்டு.

  உதாரணமாக ஹஜ் கடமையானது இப்ராஹீம் நபியவர்களின் குடும்பத்தாரை நினைத்து செய்ய கூடிய கடமையாகும்.

  இப்ராஹீம் நபியவர்களது குடும்பம் எந்த இடத்தில் தியாகத்தை செய்ததோ அதே இடத்திற்கே போய் நினைவு கூற சொல்வதிலிருந்தே இடத்திற்கான முக்கியத்துவம் விளங்கி விடுகிறது.

  குரான் ஷரீஃப்ல ஒரு வசனம் வரும், ”அந்த இடத்திலேயே (ஹுனாலிக என்ற அரபி வார்த்தை) ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாகக் கூறினார் (At the very place Zakariyya prayed to his Lord) “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்..”

  மேலே கண்ட வசனமானது குரான் ஷரீஃப் – ஸீரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்) – வசனம் 38ல் இடம் பெற்ற வசனமாகும்.

  அதாவது ஜகரிய்யா நபியவர்கள் அன்னை மர்யம் (அலை) (மதர் மேரி) அவர்களின் மிஹ்ராபுக்கு (இடத்திற்கு) வந்த போதெல்லாம் அங்கே உணவு இருப்பதை கண்டார்கள்.

  ’இங்கே தான் யாருமே வருவதில்லையே, உங்களுக்கு உணவு எப்படி கிடைத்தது? என்று கேட்டதற்கு மர்யம் (அலை) அவர்கள் ‘இது எனக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது’ என்பதாக சொல்கிறார்கள்.

  அந்த இடத்தை புனிதமான இடமாக உணர்ந்ததனால் தானோ என்னவோ ஜகரிய்யா நபி அந்த இடத்திலேயே பிரார்த்தனை செய்கிறார்கள்.

  அன்னை மர்யம் (அலை) ஒரு நபியே அல்ல, ஆனால் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு உரிய மரியாதை கிடைத்தது.

  அதே போல் குரான் ஷரீஃபில் பிறிதொரு இடத்தில்,

  (இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை – மகாமு இப்ராஹீமை – தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்) இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.
  குரான் ஷரீஃப் 2:125

  இப்ராஹீ நபியவர்கள் நின்ற இடத்தையே முக்கியமானதாக குறிப்பிட்டு இங்கே சொல்லப்படுகிறது.

  இறைவனுக்கு தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களின் அடக்கஸ்தலமும் இந்த அர்த்தத்திலேயே கண்ணியப்படுத்தப் படுகிறது.

  ஆனால், ஒரு குழப்பத்தார் மன்னிக்கவும் கூட்டத்தார், அடக்கமாகியிருப்பவர்களை அல்லாஹ்வாக கருதப்படுகின்றனர் என்று அவர்களாகவே முடிவு செய்து கொண்டு இது போன்ற இடிசேவையில் இறங்குகின்றனர்.

  மிர்ஜா குலாம் காதியானி என்பவர் தன்னை நபியென்று கூறிக் கொண்டு சில குழப்பங்களை ஏற்படுத்தினார்.

  ஆனால், ஹஜ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களை இறுதி நபியாக ஏற்றுக் கொண்ட தர்காவுக்கு ஜியாரத்திற்கு செல்பவர்கள் இவரை ஏற்றுக் கொள்வதில்லை.

  மிர்ஜா என்பவரை நபியாகவே ஏற்றுக் கொள்ளாதவர்கள், இறைவனின் மெய்யடியார்களை இறைவனாக ஏற்றுக் கொண்டார்கள் என்று இவர்கள் சொல்வது வெளிப்படையான முரண் என்பதும் இவர்களாகவே இட்டுக் கட்டுவது என்பதும் தவிர வேறில்லை.

 4. அழகான பதிவிற்கு நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s