போராளிகளை பொறுக்கி என்பதா? – கமலுக்கு சாரு நிவேதிதா கண்டனம்

குருதிப்புனல்- அல்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதா விமர்சனம் – பார்ட் 2

இந்த திறமைசாலிகள் , ரெண்டு ரூபாய் ஐம்பது பைசாவுக்கு சென்னை எலெக்ட்ரிக் டிரெய்னில் போராளி குழுக்களின் இளைஞர்கள் கூவி கூவி விற்கும் புத்தகங்களை படித்து இருந்தால் கூட போராளிகளைப்பற்றி அடிப்படை அறிவு கிடைத்து இருக்கும்.

ஆனால், நிஜத்தை வெகு தத்ரூபமாக காண்பிக்க கூடிய ஒப்பனைக்காக ஆயிரக்கணக்கான டாலர்கள் செல்வழித்து அமெரிக்காவில் இருந்து ஒப்பனை கலைஞர்களை தருவிக்கும் இவர்களால் , போராளிகளின் நிஜத்தில் ஒரு சதவிகிதத்தையாவது சொல்லலாம் என தோன்றவில்லை.

மக்கள் விடுதலைக்காக அயுதமேந்தி போராடுகிறவர்களோடு ஒருவருக்கு எத்தனை கருத்து வேறுபாடுகள் வேண்டுமானாலும் இருக்கலாம். முழுக்க முழுக்க அவர்களின் கோட்பாட்டை தாக்கலாம். எல்லாவற்றுக்கும் உரிமையுண்டு. ஆனால் அவர்களைப் பற்றி பொய் சொல்வதற்கும் அவதூறு செய்வதற்கும் யாருக்கும் உரிமை இல்லை.போராளிகள் பொறுக்கிகள் என்றால் நம் தேச விடுதலைக்காக ஆயுதம் எடுத்த பகத்சிங் பொறுக்கியா? தென்னாப்பிரிக்காவின் வந்தேறிகளான வெள்ளையர்கள் அந்த பூமியின் சொந்தக்காரர்களான கறுப்பின மக்களை ஒடுக்கினார்கள். வெள்ளையர்களுக்கு தனி பேருந்து, தனி கடற்கரை, தனி உணவு விடுதி, தனி சட்டம், இங்கெல்லாம் அத்து மீறி நிழையும் கறுப்பின மக்கள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களுக்கு சொந்தமான பூமியிலேயே அவர்கள் விலங்கினும் கீழாக அடிமைப்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் அந்த வெள்ளைக்காரர்களின் கால்களை நக்கி கொண்டிருக்க வேண்டும் என்கிறாரா கமல்ஹாசன்?
அந்த கறுப்பின மக்கள் வெள்ளையருக்கு எதிராக ஆயுதம் எடுத்து போராடினார்கள். போராட்டத்தை கைவிட மறுத்து , 27 ஆண்டுகள் சிறையில் கிடந்தார் நெல்சன் மண்டேலா. அவர் பொறுக்கியா?
சரி, நம் நாட்டுக்கு வருவோம்.
கீழ் வெண்மணியில் நாற்பது தலித் மக்கள் தங்கள் முதலாளிக்கு பயந்து ஒரு குடிசையில் ஒளிந்து கொண்டிருந்தபோது, அக்குடிசைக்கு தீ வைக்கப்பட்டு அனைவரும் உயிரோடு கொளுத்தப்பட்டார்கள்.இகொடுன்செயலுக்கு காரணமானவர்களை சட்டம் என்ன செய்தது? ஒன்றும் செய்ய முடியவில்லை. சட்டத்தில் இருந்து தப்பிய குற்றவாளியை சுட்டு கொன்றது ஒரு போராளிதான்.
சமீபத்தில் குழந்தை தொழிலாளர்கள்- அதிலும் கொதடிமைகளாக வேலை பார்க்கும் குழந்தைகள் பற்றிய வீடியோ படம் பார்த்தேன். அதில் ஒரு குழந்தை சொல்கிறாள். வயது பன்னிரண்டு . ஆனால் 7 வயது போன்ற தோற்றம், காலை 6 மணிக்கே வேலைக்கு கிளம்ப வேண்டும். வேலை நடக்கும் இடம் 3 கி மீ தள்ளி. 7 மணிக்கு வேலை தொடங்குகிறது. கல் உடைக்கும் இடம். மாலை ஆறு மணி வரை வேலை. “ ஆறு மணி ஆச்சேம்மா ..இன்னும் கிளம்பலையா “ என்று கேட்கிறார் பேட்டி எடுப்பவர். “ அப்படி கிளம்ப முடியாதுங்க. மொல்லாளி கிளம்ப சொல்லும்போதுதான் கிளம்ப முடியும் “ என்கிறாள் சிறுமி. வார சம்பளம் 30 ரூபாய். இதை விட்டு விட்டு போக நினைத்தாலும், போக முடியாது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் இந்த நரக குழியில் வேலை செய்கிறாள்.
இந்த பேட்டி எடுத்தவரை நக்சலைட் என்கிறார் முதலாளி. போலீசும் அதை நம்புகிறது. சில தினங்களில் இவர் சுட்டு கொல்லப்படலாம். விசாரணையின்போது தப்பி ஓடினார்- சுட்டு கொன்றோம் என்ற போலீஸ் செய்தி தினசரியில் வரலாம்.

ஆக, யார் பொறுக்கி?

( தொடரும் )

 

Advertisements
This entry was posted in Uncategorized and tagged , , . Bookmark the permalink.

2 Responses to போராளிகளை பொறுக்கி என்பதா? – கமலுக்கு சாரு நிவேதிதா கண்டனம்

 1. MURUGAN B says:

  இது காந்தி என்ற கிழவன் கத்தியின்றி,ரத்தமின்றி சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மண். இங்கே கத்தியும்,துப்பாக்கியும்,சுதந்திரப்போராட்டதில் எதிரிகளிடம் தான் பயன்பாட்டில் இருந்தது. பகத்சிங் ஆயுதம் ஏந்தியிருக்கலாம் ஆனால் தம் மக்களுக்கு எதிராக அதைப் பயன்படுத்தியதில்லை.

  இன்று போராளி என்று சொல்லிக்கொள்பவர்கள் அப்படியா இருக்கிறார்கள் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்று ரயிலை கவிழ்த்து அப்பாவி பொதுமக்களை பலிகடா ஆக்குகிறார்கள்.கோரிக்கை நிறைவேறவேண்டுமானால் சாகும் வரை உண்ணா விரதம் இருக்க சொல்லுங்கள் உலகம் திரும்பிப் பார்க்கும்.இதே அகிம்சையய் தான் நீங்கள் குறிப்பிட்ட மண்டேலா விரும்பி ஏற்றார்.துப்பாக்கியை அல்ல.

  • pichaikaaran says:

   நண்பரே..இது போல தர்க்க ரீதியாக விமர்சிப்பது வரவேற்கத்தக்கது..

   ஆனால் குருதிபுனலில் , வக்கிரமாக கொச்சைப்படுத்தி இருப்பார்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s