ஷங்கருக்கு கமல் கொடுத்த ஜாதி வெறி ஐடியா- சாரு நிவேதிதா

 

அல்ட்டிமேட் ரைட்டர் சாரு என்றாலே நேர்மை என்பதுதான் அர்த்தம்.

கமல் என்றாலே விமர்சனத்தை ஏற்காதவர் என்று அர்த்தம்.

இதனால்தான், பலரும் கமலை பாராட்டியே எழுதுவது வழக்கம்..

ஆனால் எதை பற்றியும் கவலைப்படாமல் , நேர்மையாக சாரு எழுதிய குருதி புனல் விமர்சனம் , கமலை அதிர்ச்சிக்குள்ளாக்கியது….

அந்த விமர்சனத்தில் பின் குறிப்பாக வந்த பகுதி இதோ உங்கள் பார்வைக்கு…..

( முழு விமர்சனம் படிக்க பலர் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.. அவர்கள் விருப்பத்துக்கு மதிப்பளித்து முழு விமர்சனம் அடுத்து வெளியிடப்பட இருக்கிறது )

****************************************

ஜெனிடில்மேன் படம் இட ஒதுக்கிட்டுக்கு எதிரான பொய் பிரச்சாரத்தை மிக வெளிப்படையாக முன் வைத்த படம். இப்படத்தின் கதையில் முதலில் பிராமண இளைஞனே கத்தியை தூக்குவதாக இருந்ததாம். அது வேண்டாம் என ஆலோசனௌ வழங்கினார் கமல்.

பிராமாணர்கள் கத்தியை தூக்கினார்களா இல்லையா என்பதற்கு வரலாறு சான்றாக நிற்கிறது. அதையும் நம்பமுடியாமல் போனால் மனு சாஸ்திரம் எழுத்து வடிவில் சாட்சியாக நிற்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறு குறித்து ஒடுக்கியவர்கள் வழி வந்தவர்கள் சாட்சியம் சொல்ல முடியுமா? அல்லது ஒடுக்கப்பட்டவ்ர்கள் சாட்சியம் சொல்ல முடியுமா?

மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் வாங்கிய பிராமண மாணவனுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் இல்லை என்ற பச்சை பொய்யை சொன்ன ப்டம் ஜெண்டில்மேன்.

சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியலில் தன் பெயர் இல்லாமல் அதிர்கிறான் அந்த பிராமண பையன். அப்போது அவனுக்கு பின்னால் தன் பெயர் பட்டியலில் இருக்க கண்டு குதியாட்டம் போடுகிறான் ஒரு கறுப்பு மாணவன். இதன் அர்த்தம் என்ன?

மதிப்பெண் குறைவாக இருந்தாலும் கறுப்பு மாணவனுக்கு சீட் கிடைக்கும். மாவட்டத்திலேயெ முதல் இடம் பெற்றாலும் பிராமண மாணவனுக்கு சீட் இல்லை.

இதை உண்மை என எடுத்து கொண்டால் இன்றைக்கு சமூகம் முழுதும் எங்கே பார்த்தாலும் சூத்திரர்களும் , தலித்துகளும்தானே இடம் பெற்று இருக்க வேண்டும். ஆனால் நிலை அப்படி இல்லையே..

எத்தனை பிராமணர்கள் மலம் அள்ளுகிறார்கள்? எத்தனி பேர் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள்.?

ஆனால் இதற்கு மாறாக ஒரு அய் அய் டி யை எடுத்து கொண்டால் முக்கால்வாசி பேர் பிராமண்ர்களாக இருக்கிறார்கள்.

ஆக மலம் அள்ளுபவன் மலம் அள்ளுபவனாகவே இருக்க வேண்டும் என்பதுதானே கமல் வாதம்.

“ நான் சொன்ன மாற்றத்தை ஷங்கர் செய்து விட்டார் என பிறகு அறிந்தேன் “ என்கிறார் கமல். அதாவது கதானாயகன் பிராமனன் போல காட்டப்பட்டாலும் கடைசியில் அவன் சூத்திரன் என தெரிகிறது. “இட ஒதுக்கிட்டை பிராமணன் எதிர்ப்பதை விட அ-பிராமனன் எதிர்ப்பது நல்லது ” என்பது கமல் சொல்லி ஷங்கர் செய்த மாற்றம். சூதிரன் கையை எடுத்து அவன் கண்ணைக் குத்தி கொள்ள செய்வதுதான் சரி என சொல்லி கொடுத்து இருக்கிறார் கமல்.

Advertisements
This entry was posted in Uncategorized and tagged , , , . Bookmark the permalink.

2 Responses to ஷங்கருக்கு கமல் கொடுத்த ஜாதி வெறி ஐடியா- சாரு நிவேதிதா

  1. R Nagaraj says:

    ஏம்பா…சாருவ மாத்த முடியுமா.. துக்ளக்ள எளுதுவாரு.. அப்பறம் முற்போக்கும்பாரு… ஏதோ சங்கர் ஒண்ணும் தெரியாத பாப்பா மாதிரி யே… அவரு அப்படித்தான் எல்லா படங்களையும் எடுக்கிறாரு.. எத்தனையோ உதாரணம் தர முடியும் அன்னியன் உட்பட… சும்மா கமல் பேர போட்டா நிறய பேர் படிப்பாங்கன்னு அள்ளி வுடக்கூடாது… சரி இப்போ என்னா சொல்ற கமல் கெட்டவன்ங்கிறியா … சரி ஒத்துகிடலாம்…

    • pichaikaaran says:

      கெட்டவர்னு சொல்லல… அவர் தன் இயல்புபடி இருக்கார்.. அதில் தவறு இல்லை.. ஆனால் சிலர் செய்ற்கையாக ஒரு பிம்பம் உருவாக்க பார்க்கிறார்கள்.. அதுதான் தவறு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s