சிந்தனை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடியுமா?
சிந்தனை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடியுமா… ஒரு தலைவன் நமக்கு எல்லா பதில்களையும் தர முடியுமா,அன்பு என்றால் என்ன என்பதை போன்ற கேள்விகளுக்கு, ஜே கிருஷ்ணமுர்த்தியின் இந்த உரையாடல் பதில் அளிக்க கூடும்ம்… கவனமாக படியுங்கள்….

************************************************
இரு இளைஞர் களுடன் உரையாடுக்றார், ஜே கே

சார்… உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா?”

தாரளமா…

“நேசம் அன்பு, காதல்னா என்ன?”

இந்த வார்த்தை பற்றிய விளக்கம் வேண்டுமா…

“காதல்னா எப்படி இருக்கணும்னு பல கருத்துக்கள் இருகின்ன்றன… எல்லாம் குழப்பமா இருக்கே “

என்ன கருத்துக்கள்…

“காமம் கலக்க கூடாது..பேராசை கூடாது… எல்லோரையும் , தன்னைப்போல நேசிக்கணும்… பெற்றோரை நேசிக்கணும்….”

மற்றவர் கருத்து இருக்கட்டும்… உங்களுக்கு இதை பத்தி கருத்து இருக்கா..

“நான் நினைப்பதை சொல்வது கஷ்டம்… கடவுளை நேசிபதுதன் உண்மயான அன்பு..அன்பில் காமம் கலக்க கூடாது..ஒருவரை ஒருவர் நேசிக்கணும்,, அன்பே சிவம்,.,இரக்கமே இறைவன்..”

இந்த கருத்துக்கள் எல்லாம், நம் சூழ்நிலையை பொறுத்து உருவாகின்றன.. இவை எல்லாம் , தேவையா என சிந்திக்க வேண்டாமா…

“அப்படீனா , ஒரு கருத்தை ஏற்று கொள்வதே தப்பா ….”

சரி, தப்பு என்று சொல்வதும் ஒரு வகை கருத்துதானே… இந்த கருத்துக்கள் எல்லாம் எப்படி உருவாகின்றன என கவனித்தால், இதன் முக்கியத்துவம் புரியும்…

“கொஞ்சம் விளக்குங்க…”

நாம் எந்த சூழ்நிலையில் வளர்ந்தொமோ, அதுதானே நம் சிந்தனையை உருவாக்குகிறது…. ( ஒரு ” பகுத்தறிவாதி குடும்பத்தில் பிறந்த ஒருவர், கடவுள் இல்லை என்பார்… ஆன்மிக வாதி குடும்பத்தில் பிறந்த ஒருவர் வேறு மாதிரி சொல்லுவர் )
இதை எல்லாம் தாண்டி, உண்மை என்ன என்று நாம் பார்ப்பது இல்லை…நம்புவது, நம்பாமல் இருப்பது, முடிவுகள், சிந்தனைகள், கருத்துகள்,எல்லாமே, நம் சூழ்நிலையை பொறுத்ததுதான்..இல்லையா ?

“ஆமா… இதில் என்ன தப்பு..”

சரி,,தப்பு அப்படீங்கறதே கருத்துதானே.. உண்மை என்பது கருத்தகளை பொருத்தது அல்ல..

“சார்..என்னதான் சொல்ல வர்றீங்க…”

அன்பு, காதல் என்பதை பற்றி உங்களுக்கு சில கருத்துக்கள், அபிபராயங்கள் இருக்கு..இல்லியா….

ஆமா..

அவை உங்கள்ளுக்கு எப்படி கிடைத்தது…

“பல சிந்தனையாளர்கள் , ஞானிகள் எழுத்துக்களை படிச்சேன்…நானும் சிந்தனை செய்து, இந்த முடிவுகளுக்கு வந்தேன்…”

அவுங்க சொன்னதுல , உங்களுக்கு பிடிச்சதை ஏதுக்குடீங்க

“ஆமா… என் பகுத்தறிவை பயன் படுத்தி, உண்மையை தேர்ந்து எடுத்தேன்..”

எதை அடிப்படைய வச்சு தேர்ந்தெடுத்தீங்க ?

“என்னுடைய அறிவு…”

அறிவு நா என்ன… உங்களை மடக்க இப்படி கேட்கல… அன்பு என்பதை பத்தி, அபிராயங்கள், முடிவுகள், கருத்துக்கள் எல்லாம் எப்படி உருவாகுதுன்னு பார்க்க போறோம்,, அவ்வளவுதான்.. சரி சொல்லும்ங்க.. அறிவு ந எனா?

“பல புத்தகங்களை படித்து கற்பதுதான் அறிவு.. பல தொழில் நுட்பங்கள் , அறிவியல், தகவல்கள் இதை எல்லாம் கற்பது கூட அறிவு தான்…”

அறிவு என்பது , கொஞ்சம் கொஞ்சமாக சேர்கப்டுவது… இல்லையா… ஒரு வேளை, உங்கள் கலாச்சாரம், அன்பு என்பதெல்லாம் சும்மா டுபக்கொர்… எல்லாம் உடல் சார்ந்தது
தான், என சொல்லி கொடுத்து இருந்தால், நீங்களும் அதை தான் சொல்லுவீர்கல் ..இல்லையா…

“இல்லை..அவ்வப்போது நாங்களாகவும் சிந்திப்போம்…”

சிந்தனை என்பதே, ஒரு கருத்தில் இருந்து இன்னொரு கருத்திற்கு செல்வதுதான்… மனம் என்பது, அன்பு என்பதை பற்றிய கருத்துக்கள், முடிவுகளால், பதிக்கப்பட்டுள்ளது,,, இல்லையா..

“ஆமா… சரி அன்பு னா என்ன..”

ஒரு அகராதில பார்த்தா, வில்லகம் கிடைக்கும்.. ஆனா விளக்கம் என்பது உண்மை உணரவை பிரிய வைக்காது…உங்க அறிவுக்கு யற்ப, சிலவற்றை ஏற்கலாம், சிலவற்றை மறுக்கலாம்…

“அப்படீனா, உண்மை அறியவே முடியாதா..”

சிந்தப்பதன் மூலம் , உண்மையை அறிய முடியாது… அன்பு னா என்னனு சிந்திச்சு கண்டு பிடிக்க முடியுமா

“சிந்திக்காம எப்படி கண்டு பிடிப்பது..”.

சிந்திப்பதுனா ஏன்னா…

“ஒரு விஷயத்தை பற்றி படிப்பது… விவாதிப்பது… ஒரு முடிவுக்கு வருவது…”

இது அன்புன என்ன னு உங்களுக்கு உணர்துச்சா…

“ஆமா.. சிந்திப்பதன் ன் மூலம், மனம் தெளிவாச்சு… ஒரு முடிவுக்கு வர முடிஞ்சது…”

அதவது, சில கருத்துக்கள், மற்றவற்றை விட தனியா தெரிஞ்சது… அப்படிதானே…

ஆமா…”

அன்பு என்ற வார்த்தை , அன்பு அல்ல… விளக்கங்கள் எதுவும் உண்மையை உணர்த்தாது..

அன்பு, கடவுள், உண்மை போன்றவற்றை அறிய வேண்டும் என்றால், முன் கூட்டிய முடிவுகள், நம்பிக்கைகள, எதுவும் இருக்கா கூடாது… ( முன்பே கடவுள் இருக்கிறர் என்றோ இல்லை என்றோ முடிவு செய்ய கூடாது )
புத்தகங்கள், விளக்கங்கள், நபிக்கைகள், தலைவர்கள் போன்றவர்த்ரை தள்ளி வைத்து விட்டு, சுய தேடலுக்கான பயணத்தை தொடருங்கள்…
நேசியுங்கள்- அன்பு என்றால் எப்படி இருக்கா வேண்டும் , எப்படி இருக்க கூடாது என்பதை பற்றி அபிப்ராயங்களில், சிக்கி கொள்ளாதீர்கள்..
நீங்கள் அன்பு செலுத்தும் போது, எல்லாம் சரியாக நடக்கும்…
வேறு யாரும் உங்களுக்கு போதிக்க முடியாது…

உங்களுக்கு போதிக்க நினைப்பவனுக்கு எதுவும் தெரியாது… தெரிந்தவனுக்கு சொல்ல முடியாது.

 

Advertisements
This entry was posted in Uncategorized and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s