your days are numbered ( எ(இ)துவும் நடக்கலாம் !!!!! )


” என் சர்வீஸ்ல எத்தனை பேரை பார்த்து இருப்பேன்.. ஒண்ணும் கவலைப்படாதீங்க ,, நான் பார்த்துக்றேன் “
உறுதியான, ஆதரவான குரலில் சொன்னார் மாதவன். ஆசிரியர் பணியில் அவர் பெற்று இருந்த அனுபவம் அவர் பேச்சிலேயே தெரிந்தது…
“ சார்..எங்க ஒரே பொண்ணு இவ,,கீதா,,, நல்ல பொண்ணு ,, நல்லா படிச்சுகிட்டு இருந்தா,, எப்பவும் ஃபர்ஸ்ட் ரேங்க் வருவா..  யார் கண்ணு பட்டுச்சோ தெரியல… அவ நடவடிக்கைகளில் பெரிய மாற்றங்கள்… சக மாணவிகளிடம் பிரச்சினை..அடி உதை… அஞ்சாங்கிளாஸ் பொண்ணு இப்படி மிருகம் மாதிரி நடந்துக்கிறாளேனு பயந்து போன பள்ளி நிர்வாகம், அவளை வீட்டுக்கு அனுப்பிச்சுட்டாங்க….
சார்..அவ வாழ்க்கை பாழாகிட கூடாது… அவ படிச்சு பெரிய ஆள் ஆகானும்ங்றது எங்க ஆசை “
கீதாவின் தாய் கண்ணீருடன் பேசினாள்.. தந்தையும் டென்ஷனாக இருந்தார்..
“ குழந்தைகளில் மனசில் சில தேவை இல்லாத டென்ஷன் இருக்கும்.. படிக்கும் டென்ஷன், எக்சாம் டென்ஷன் இதெல்லாம் இருக்கு..இதை எல்லாம், நீக்கி நல்லா பாடம் சொல்லி கொடுத்தா எல்லாம் சரி ஆகிடும் … ஒரு மாதம் என்னிடம் டியூஷன் அனுப்புங்க.. சரி பண்ணிடலாம்..”
கீதாவின் தலையை ஆதரவுடன் கோதினார் மாதவன்


*************************************************************************
ஆனால் கீதா அவர்கள் சொன்னது போல முரட்டு பெண் இல்லை… பணிவுடன் அமந்து இருப்பாள்…
கேட்ட கேள்விக்கு தெளிவாக பதில் அளிப்பார்..
ஆங்கிலம் எடுத்தார் மாதவன்..
”இந்தியா சிறந்த  நாடாக திக்ழ்கிறது … இது என்ன காலம்… ?” கேட்டார்..
“ இறந்த காலம் சார் “ அவள் பதில் அளிக்க , வகுப்பறையே சிரிப்பால் அதிர்ந்தது,,,
“ உன்னை போன்ற மாணவிகள் இருந்தால், இந்த வாக்கியம் எதிர்காலமாக அமையவும் வாய்ப்பு இருக்கிறது “ சிரித்தபடி சொன்னார் மாதவன்..
ஆங்கில வாக்கியங்கள், வார்த்தைகள் , பயன்பாடுகள் பற்றி எடுதவர், தற்செயலாக போர்டுக்கு அருகில் இருந்த கண்ணாடியை கவனித்தார்.. அதில் கீதாவின் முகம் தெரிந்தது
அவள் சாந்தமாக முகம், விகாரமாக இருப்பது போல தோன்றியது…

அவர் பார்ப்பதை அறிந்த அவள் விகாரமாக இளித்தாள்..
அதிர்ந்து போன அவர், சட் என திரும்பினார்…
கீதா அமைதியாக இருந்தாள். எந்த மாற்றமும் இல்லை…
ஓ..வெறும் மன தோற்றம்.. சொல்லிக்கொண்டார் அவர்..
ஆனால் இது மனதோற்றம் இல்லை என அவர் இதயம் சொன்னது..
“ சரி..பாடம் முடிந்தது… இப்ப கேள்வி நேரம்.. “
கீதாவை பார்க்க்க சற்று அச்சமாக இருந்தது….
மனதை திடப்படுத்தி கொண்டார்..
” days.. இதை வைத்து வாக்கியம் அமை பார்க்கலாம்..” கீதாவிடம் கேட்டார்..
your days are numbered “  அழுதமாக சொன்னாள் அவள்..
அவள் குரலில் இருந்த உண்மை தன்மை உடலை ஊடுறுவியது..
” ஹேய்..என்ன சொல்ற ?”
“ ஒரு புத்தகத்துல, இந்த வாக்கியத்தை படிச்சேன் சார்,,, இதில் இலக்கண பிழை இருக்கா? “
அப்பாவியாக அவள் கேட்டாள்..
“ இலக்கணப்படி சரிதான்.. ஆனால் வேறூ வாக்கியம் சொல்லி இருக்கலாம்.. ஓகே… இன்னிக்கு வகுப்பு முடிந்தது..  நாளை பார்க்கலாம் “

********************************************************
இரவில் தூக்கம் வராமால் புரண்ட் புரண்டு படுத்தார் மாதவன்.. கீதாவின் முகம் விதம் விதமாக மாறி அவரை தொந்தரவு செயதது… திடீரென அவள் பற்கள் நீண்டு , கண்கள் சிவப்பாஇ பேய் தோற்றம் காட்டவே, அலறி விட்டார்…
வீட்டில் அனைவரும் எழுந்து விட்டனர்..
“ என்னங்க .. என்ன ஆச்சு”
விளக்குகள் போடப்பட்டு அனைவரும் வந்து பிட்டனர்..
“ என்ன டேடி… என்ன ஆச்சு “
“ இல்லை..ஏதோ கனவு “
அவர்களை அனுப்பி விட்டாலும், தூக்க்ம வரவில்லை
*********************************************************
மறு  நாள் வகுப்பு ஆரம்பிக்கும் முன், இதற்கு முடிவு கட்ட நினைத்தார் அவர்..
” எல்லொர்ரும் படிங்க.. கீதாவிடம் கொஞ்சம் பேசணும்… கீதா .. இங்கே வாமா “
பக்கத்து அறைக்கு சென்றார்கள்..
” சொல்லுமா கீதா..உனக்கு என்ன பிரச்சினை”
கீதா பரிதாபமாக பார்த்தாள்
“ நான் நல்லாத்தான் இருக்கேன் , சார் “
பளாரென அறைந்தார் அவர்..
ஒரு பத்து வயது பெண்ணை அடித்து விட்டொமே என அடுத்த கணமே வருந்தினார்
அடி பட்ட கீதாவின் கன்னம் சிவந்து விட்டது..
அழ போகிறாள் என நினைத்தார்,
ஆனால் அவள் விகாரமாக , கோரமாக சிரித்தாள்
“ மாதவன்… உன் டைம் வந்துடுச்சி… ஹி ஹி ஹி “ அவள் முகம் கொடூரமாக மாறியது..
“ ஹேய்… என்கிட்டயா விளையாடுற… “
ஸ்கேலை எடுத்து அவளை அடித்து விளாச தொடங்கினார்…
அவள் அடியை தாங்கி கொண்டு, சிரித்தபடியே இருந்தாள்..
****************************************************************************************
”என் சர்வீஸ்ல எத்தனை பேரை பார்த்து இருப்பேன்.. ஒண்ணும் கவலைப்படாதீங்க ,, நான் பார்த்துக்றேன் “
உறுதியான, ஆதரவான குரலில் சொன்னார் டேனியல் . மனோதத்துவ நிபுணர்  பணியில் அவர் பெற்று இருந்த அனுபவம் அவர் பேச்சிலேயே தெரிந்தது…
“ டாக்டர்  இவர் என் அப்பா… பேரு  மாதவன் ,,,,, நல்ல மனிதர்.. நல்ல குடும்ப தலைவர்…  நல்ல ஆசிரியர்  ..
பலரை உருவாக்கி இருக்கார்…  திடீர்னு என்ன ஆச்சுனு தெரியல… கீதாங்ற பொண்ணை தனி ரூமுக்கு கூட்டி போய், அடி வெளுத்துக்கிட்டு இருந்தார்,,, அவ பாவம் கதறுறா…. இவர் விடல..
அப்புறம் அக்கம் பக்கத்துல எல்லாம் வந்து அவளை காப்பாத்துனாங்க.. இல்லைனா கொன்னே போட்டு இருப்பார்.. மத்த மாண்வர்கள் எல்லாம் பயந்து போயி வீட்டுக்கு போயிட்டாங்க..
நல்ல வேளை போலீஸ் கேஸ் ஆகல…
என்ன பிரச்சினைனு பாருங்க “
டேனியல் அமைதியாக பார்த்தார்
“ வொர்க் பிரசர்… டென்ஷன்… இதுதான் காரணமா இருக்கும் ..என்னனு செக் பண்ணலாம் “
அவர்கள் பேசிக்கொண்டிர்ந்த போது, அமைதியாக இருந்த மாதவனின் முகம் திடீரென விகாரமாக மாறி, அதன் பின் சாதாரணமானதை இருவரும் கவனிக்கவில்லை…
“ சரி. நீங்க வெளியே வெயிட் செய்ங்க.. மாதவன் சார்கிட்ட தனியா பேசணும்”
அவன் வெளியே செல்ல, மாதவன் பரிதாபமாக இருக்கையில் அமர்ந்து இருந்தார்,,
” நைஸ் மீட்டிங் யூ மாதவன் சார்..உங்களை பத்தி நிறைய கேள்வி பட்டு இருக்கேன்.. ஆங்கிலத்துல கில்லாடியாமெ நீங்க?
சார்.. சமீபத்துல நீங்க படித்ததில் , பிடித்த சிறுகதை எது? “
மாதவன் முகம் தீவிரமாக மாறியது..
ஆழ்ந்த , அடர்த்தியான, தெளிவான குரலில் சொன்னார்
your days are numbered

Advertisements
This entry was posted in Uncategorized and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s